ADVERTISEMENT

அமீரகத்தில் 250 ஐ தாண்டிய தினசரி கொரோனா பாதிப்பு…!!!

Published: 18 Dec 2021, 1:23 PM |
Updated: 18 Dec 2021, 1:25 PM |
Posted By: admin

கடந்த ஒரு சில நாட்களாக அமீரகத்தில் தினசரி கொரோனா தொற்றானது உயர்ந்து வரும் நிலையில் தற்பொழுது ஒரே நாளில் 250 க்கும் மேல் கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT

அமீரகத்தில் இன்று (சனிக்கிழமை, டிசம்பர் 18, 2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில் கடந்த ஒரு நாளில் மட்டும் 266 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 743,852 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் அமீரகத்தில் இன்று கொரோனாவிற்கு  எவரும் பலியாகவில்லை. இதனால் அமீரகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் மாற்றமில்லாமல்  2,151 ஆக இருக்கின்றது.

ADVERTISEMENT

கடந்த ஒரு நாளில் மட்டும் 118 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 738,505 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமீரகத்தில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள கொரோனா பாதிப்பால் அபுதாபியில் கடந்த சில மாதங்களுக்கு முன் வரை இருந்த கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, அமீரகத்தின் பிற பகுதிகளில் இருந்து அபுதாபி பயணிப்பவர்களுக்கு EDE ஸ்கேனர்கள் மூலம் சோதனை செய்யப்பட்ட பின்னரே உள்நுழைய அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT