ADVERTISEMENT

UAE: தனியார் துறை நிறுவனங்கள் அரசின் முடிவுக்கு ஏற்ப வார வேலை நேரத்தை மாற்றியமைக்க வலியுறுத்தல்..!! MOHRE அமைச்சர் தகவல்..!!

Published: 7 Dec 2021, 2:15 PM |
Updated: 7 Dec 2021, 2:24 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரக அரசால் இன்று அறிவிக்கப்பட்ட அரசாங்க ஊழியர்களுக்கான புதிய வார விடுமுறை நாட்களை தொடர்ந்து, தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் வணிகங்கள் அரசின் புதிய வேலை வார முறைக்கு ஏற்றவாறு ஊழியர்களின் வேலை நேரத்தை மறுசீரமைக்க ஐக்கிய அரபு அமீரகத்தின் மனித வளங்கள் மற்றும் குடியேற்றத்துறை (Ministry of Human Resources and Emiratisation – MOHRE) அமைச்சர் டாக்டர் அப்துல் ரஹ்மான் அல் அவார் கேட்டுக்கொண்டுள்ளார்.

ADVERTISEMENT

இது குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில், தனியார் துறை சார்ந்த நிறுவனங்கள் தங்களின் வணிக நோக்கங்களுக்கு ஏற்ற வகையில், தொழிலாளர்களின் செயல்திறனை அதிகரிக்கும் விதமாகவும் மற்றும் குடும்ப ஒற்றுமையை ஆதரிக்கும் விதத்திலும் ஊழியர்களின் வேலை நேரத்தை மாற்றியமைக்க வலியுறுத்தியுள்ளார். மேலும் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு அனுமதி அளிக்க முதலாளிகள் கடமைப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் அமீரக அரசால் அறிவிக்கப்பட்ட புதிய தொழிலாளர் சட்டத்தின்படி, தனியார் துறை ஊழியர்களுக்கு வாரத்திற்கு குறைந்தபட்சம் ஒரு நாள் விடுமுறை கிடைக்கும் என்றும், எனினும் தனியார் துறை நிறுவனத்தின் விருப்பப்படி இதை அதிகரிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

மேலும் புதிய தொழிலாளர் சட்டம் விடுமுறை நாளைக் குறிப்பிடவில்லை, வேலை ஒப்பந்தத்தின்படி முதலாளிகளும் ஊழியர்களும் ஒரு உடன்பாட்டை எட்ட முடியும் எனவும் டாக்டர் அல் அவார் சுட்டிக்காட்டியுள்ளார். அரசின் இந்த புதிய வேலை வாரம் தனியார் துறைக்கான வெளிநாட்டு வணிக பரிவர்த்தனைகளின் தொடர்ச்சியான ஓட்டத்தை உறுதி செய்யும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில், அரசின் இந்த முடிவானது முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்முனைவோரின் நலன்களை ஆதரிக்கிறது மற்றும் பல்வேறு பொருளாதார துறைகளில் பணியாளர்களின் உற்பத்தி மற்றும் செயல்திறனை அதிகரிக்கிறது என்றும் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

அரசாங்க ஊழியர்களுக்கு வாரத்திற்கு இரண்டரை நாட்கள் விடுமுறை அளிக்கும் புதிய வேலை வார முறையை ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம் அறிவித்ததற்கு பதிலளிக்கும் விதமாக இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.