அமீரக செய்திகள்

UAE: தனியார் நிறுவனங்கள் வார நாட்களை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏதுமில்லை..!! விரும்பினால் மாற்றி கொள்ளலாம்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் தனியார் துறையில் உள்ள நிறுவனங்கள் தங்கள் வார இறுதி நாட்களை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்ற வேண்டிய கட்டாயம் இல்லை என்று மனித வளங்கள் மற்றும் எமிரேட்டிசேஷன் அமைச்சர் டாக்டர் அப்துல்ரஹ்மான் அல் அவார் அமீரகத்தில் உள்ள ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடம் 2022 பிப்ரவரி மாதத்தில் இருந்து அமீரகத்தில் அமலுக்கு வரவுள்ள புதிய தொழிலாளர் சட்டங்கள் தனியார் துறை முதலாளிகளுக்கு வாரத்தில் எந்த நாளை இறுதி நாளாக தேர்ந்தெடுக்கும் நெகிழ்வுத்தன்மையை அளிக்கிறது என்றும் அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் துறை எப்போது செயல்பட வேண்டும் என்று அரசாங்கம் கூறவில்லை என்றாலும், முதலாளிகள் தங்களின் ஊழியர்களை வேலை செய்ய எத்தனை மணிநேரம் கேட்கலாம் என்பதற்கு சட்ட வரம்பு உள்ளது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தொழிலாளர் சட்டத்தின் படி, ஊழியர்களின் அதிகபட்ச வேலை நேரம் ஒரு வாரத்திற்கு 48 மணிநேரம் ஆகும், மேலும் தனியார் நிறுவனங்கள் விரும்பினால் இதனை குறைத்து குறுகிய வேலை நேரத்தை தேர்வு செய்யலாம், ஆனால் அவர்களால் அதிகபட்ச வேலை நேரத்திற்கும் மேலாக வேலை செய்ய நிர்பந்திக்க முடியாது என்று குறிப்பிட்ட அவர் தொழிலாளர் சட்டத்தின் முக்கிய அம்சம் ஊழியர்களின் உரிமைகளுக்கும், முதலாளிகளின் உரிமைகளுக்கும் இடையிலான பணி உறவைப் பாதுகாப்பதாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனியார் துறை நிறுவனங்கள் எத்தனை மணி நேரம் மற்றும் நாட்களை தங்களின் வேலை நேரமாக நிர்ணயிக்க விரும்புகிறார்கள் என்பதைத் தேர்வு செய்ய வேண்டும் என்று கூறிய அல் அவார், வார இறுதியில் குறைந்தபட்சம் ஒரு நாள் விடுமுறையை தனியார் நிறுவனங்கள் அனுமதிப்பார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில் தனியார் துறை நிறுவனங்கள் அரசாங்கத்தின் புதிய வார விடுமுறை நாட்களுக்கு ஏற்ப தங்கள் வார இறுதி நாட்களை சனி மற்றும் ஞாயிறு என மாற்றிக் கொள்ளும் என நம்புவதாகவும் மனித வளங்கள் மற்றும் எமிரேட்டிசேஷன் அமைச்சர் டாக்டர் அப்துல்ரஹ்மான் அல் அவார் தெரிவித்துள்ளார்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!