ADVERTISEMENT

துபாய்: விசா மெடிக்கல் சென்டர், PCR மையம், மருத்துவமனை செயல்படும் புதிய நேரத்தை வெளியிட்ட DHA .!!

Published: 8 Jan 2022, 5:21 AM |
Updated: 8 Jan 2022, 10:02 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய வார வேலை நாட்களுக்கு ஏற்ப துபாய் சுகாதார ஆணையம் (DHA) துபாய் முழுவதிலும் உள்ள அதன் சுகாதார மையங்களின் வேலை நேரங்களில் திருத்தும் செய்து புதிய வேலை நேரத்தை அறிவித்துள்ளது. அதன்படி, DHA வின் கீழ் இயங்கக்கூடிய கோவிட்-19 பரிசோதனை மையங்கள், மெடிக்கல் பிட்னெஸ் சென்டர்ஸ், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் (Primary Health Centre), சிறப்பு மையங்கள் (Specialized Centre) ஆகியவை செயல்படும் புதிய நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கொரோனா பரிசோதனை மையங்கள்

  • அல் நாசர் கிளப் மையம் (Al Nasr Club Centre) வார நாட்களில் காலை 7.30 முதல் மாலை 3.30 வரை செய்லபடும்.
  • மால் ஆஃப் தி எமிரேட்ஸ் மையம் (Mall of the Emirates Centre) வாரத்தின் அனைத்து நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்.

மெடிக்கல் ஃபிட்னெஸ் சென்டர்ஸ் (விசா மெடிக்கல் சென்டர்)

ADVERTISEMENT

>> ரஷிதியா (Rashidhiya), அல் கராமா (Al Karama) மற்றும் சலீம் ஸ்மார்ட் சென்டர்கள் (Salem Smart Centre) திங்கள் முதல் வியாழன் வரை காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும். வெள்ளிக்கிழமைகளில் காலை 7.30 மணி முதல் மதியம் 12 மணி திறந்திருக்கும்.

>> அல் கூஸ் (Al Quoz), பர் துபாய் (Bur Dubai), அல் நஹ்தா (Al Nahda), அல் கர்கூத் (Al Garhoud) மற்றும் அல் எலாயிஸ் (Al Yalayes) மையங்கள் திங்கள் முதல் வியாழன் வரை காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும். வெள்ளிக்கிழமை மட்டும் காலை 7.30 முதல் 12 மணி வரை மற்றும் மாலை 4 முதல் இரவு 8.30 வரை என இரண்டு ஷிப்டுகளில் செயல்படும்.

ADVERTISEMENT

>> DAFZA, அல் லிசைலி (Al Lisaili), எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் (Emirates Airlines) மற்றும் வில்லேஜ் மையம் (Knowledge Village Centre) ஆகியவை திங்கள் முதல் வியாழன் வரை காலை 7.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை திறந்திருக்கும். வெள்ளிக்கிழமைகளில் காலை 7.30 மணி முதல் மதியம் 12 மணி வரை செயல்படும்.

>> JAFZA, துபாய் இன்டர்நெஷனல் பினான்சியல் சென்டர் (DIFC) மற்றும் எமிரேட்ஸ் மையம் (Emirates Centre), திங்கள் முதல் வியாழன் வரை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்திருக்கும். வெள்ளிக்கிழமைகளில் காலை 8 மணி முதல் மதியம் 12.30 மணி வரை இருக்கும்.

>> ஜபீல் மையம் (Zabeel Centre) திங்கள் முதல் வியாழன் வரை காலை 7.30 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், வெள்ளிக்கிழமை காலை 7.30 முதல் மதியம் 12 மணி வரையிலும் செயல்பாட்டில் இருக்கும்.

>> நிலத்துறை மையம் (Land Department Centre) திங்கள், புதன் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் காலை 7.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.

>> அல் முஹைஸ்னா மையம் (Al Muhaisnah Centre) ஞாயிறு முதல் வியாழன் வரை காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரையிலும், வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் 1 மணி முதல் மதியம் 2 மணி வரை தவிர்த்து மற்ற நேரங்களில் திறந்திருக்கும்

மருத்துவமனைகள்

>> ரஷித் மருத்துவமனை (Rashid Hospital) மற்றும் துபாய் மருத்துவமனையின் (Dubai Hospital) சிறப்பு கிளினிக்குகள் காலை 7.30 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும். எனினும் அவசரகால பிரிவுகள் எல்லா நாட்களிலும் 24 மணி நேரமும் செயல்படும். ரஷித் மருத்துவமனையில் நோயாளிகளை பார்வையிடும் நேரம் மாலை 5 மணி முதல் 6 மணி ஆகவும், துபாய் மருத்துவமனையில் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி ஆகவும் இருக்கும்.

>> லதீஃபா மருத்துவமனையில் (Lattifa Hospital), வெளிநோயாளிகளுக்கான கிளினிக்குகள் திங்கள் முதல் வியாழன் வரை காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை செயல்படும். வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் இரவு 11.30 மணி வரை திறந்திருக்கும். நோயாளிகளை பார்வையிடும் நேரம் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மற்றும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை என இரண்டு ஷிப்டுகளாக இருக்கும்.

>> ஹத்தா மருத்துவமனையில் (Hatta Hospital) திங்கள் முதல் வியாழன் வரை காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையிலும், வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் வெளிநோயாளிகள் சிகிச்சைக்கான நேரங்களாக செயல்படும். நோயாளிகளை பார்வையிடும் நேரம் திங்கள் முதல் வியாழன் வரை காலை 7.30 மணி முதல் மதியம் 12 வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை என இரண்டு ஷிப்ட்டுகளாகவும், வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் அனுமதிக்கப்படும்.

ஆரம்ப சுகாதார நிலையங்கள் 
  • நாத் அல் ஹமர் (Nad Al Hamar), அல் பர்ஷா (Al Barsha), அல் கவானீஜ் (Al Khawaneej), அல் பிடா (Al Bida) மற்றும் துபாய் விமான நிலைய சுகாதார மையங்கள் (Dubai Airports Health Centres) முழு நேரமும் செயல்பாட்டில் இருக்கும்.
  • பெரும்பாலான பிற ஆரம்ப சுகாதார நிலையங்கள் திங்கள் முதல் வியாழன் வரை காலை 7.30 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், வெள்ளிக்கிழமை காலை 7.30 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும் செயல்படும்.
  • அல் லிசைலி ஹெல்த் சென்டர் (Al Lisaili Health Centre), அல் மிசார் ஹெல்த் சென்டர் (Al Mizhar Health Centre) மற்றும் அபு ஹைல் ஹெல்த் சென்டர் (Abu Hail Health Centre) ஆகியவை ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை செயல்படும்.
சிறப்பு மையங்கள்
  • துபாய் கருத்தரிப்பு மையம் (Dubai Fertility Centre) திங்கள் முதல் வியாழன் வரை காலை 7.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை செயல்படும். வெள்ளிக்கிழமைகளில் காலை 7.30 முதல் மதியம் 12 மணி வரை இருக்கும். வார இறுதி நாட்களில் முன்பதிவு செய்துகொள்வதன் அடிப்படையில் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை செயல்படும்.
  • பிசியோதெரபி மற்றும் மறுவாழ்வுக்கான மையம் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7.30 முதல் மாலை 6 மணி வரை செயல்படும். ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை செயல்படும்.
  • துபாய் இரத்த தான மையம் காலை 7 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.