2022 ஆம் ஆண்டிற்கான டிரிபாட்வைசர்ஸ் (tripadvisor) டிராவலர்ஸ் சாய்ஸ் விருதுகளின் தி பெஸ்ட் ஆஃப் தி பெஸ்ட் டெஸ்டினேஷனின் படி 2022 ஆம் ஆண்டிற்கான உலகின் மிகவும் பிரபலமான இடமாக துபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.
12 மாத காலப்பகுதியில் சேகரிக்கப்பட்ட மதிப்புரைகள் மற்றும் கருத்துகளின் அடிப்படையில் பயணிகளின் விருப்பமான இடங்கள், ஹோட்டல்கள், உணவகங்கள், செயல்பாடுகள் மற்றும் பல காரணிகளை அடிப்படையாக கொண்டு விருதுகள் கௌரவிக்கப்படுகின்றன. இதனடிப்படையில் லண்டன், ரோம் மற்றும் பாரிஸ் போன்ற பிரசித்தி பெற்ற உலக நகரங்களை விட துபாய் முதலிடத்தை பிடித்துள்ளது.
உலகின் பிரபலமான சுற்றுலா இடங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்த துபாய்…!!
இந்த அங்கீகாரத்தை அடுத்து, துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம், துபாயின் மிகவும் பிரபலமான அடையாளங்களைக் கொண்ட வீடியோவை ட்வீட் செய்துள்ளார்.
அத்துடன் துபாய் பட்டத்து இளவரசர் சுற்றுலாப் பயணிகளுக்கு “எங்கள் வீடு எப்போதும் உங்களுடையதாக இருக்கும்” எனக் கூறி அழைப்பு விடுத்துள்ளார்.
Dubai.. The best-rated destination in the world in Tripadvisor’s 2022 Travellers’ Choice Awards.. Our home will always be yours pic.twitter.com/l0W805DLCq
— Hamdan bin Mohammed (@HamdanMohammed) January 20, 2022
கொரோனா பரவலினால் நாடுகள் எல்லைகளை மூடிய பின்னர் சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் திறக்கப்பட்ட உலகின் முதல் நகரங்களில் துபாய் ஒன்றாகும். அப்போதிருந்து தற்பொழுது வரை கொரோனா பாதுகாப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மில்லியன் கணக்கான சுற்றுலாப் பயணிகள் துபாய்க்கு தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.