ADVERTISEMENT

UAE: எதிஹாட் ரயில் உள்ளே இத்தனை வசதிகளா..? ரயிலின் உள்ளே எப்படி இருக்கும்..? பார்க்கலாம் வாங்க..!!

Published: 21 Jan 2022, 8:53 PM |
Updated: 22 Jan 2022, 12:49 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் பொது போக்குவரத்தில் பெரிய மாற்றத்தை கொண்டு வரவுள்ள ஹைடெக் பயணிகள் ரயிலான எதிஹாட் ரயிலின் வெளிப்புற தோற்றம் எவ்வாறு இருக்கும்..? ஸ்டைலிஷ் இன்டீரியர் மற்றும் வசதியான இருக்கைகள் கொண்ட ஆடம்பரமான ரயில் பெட்டிகள் உள்ளே எவ்வாறு இருக்கும்..? என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கீங்களா..?

ADVERTISEMENT

அமீரக குடியிருப்பாளர்கள் மட்டுமில்லாது அமீரகத்திற்கு வருகை தரும் சுற்றுலாவாசிகள் உட்பட நாம் அனைவரும் மிகவும் ஆவலாக காத்திருந்த எதிஹாட் ரயிலின் புகைப்படங்களை எதிஹாட் ரயில் நிறுவனம் பொதுத்தளத்தில் பகிர்ந்துள்ளது.

எதிஹாட் ரயிலின் உட்புற தோற்றத்தின் மாதிரி புகைப்படம்

முதல் கட்டமாக வெளியிடப்பட்டுள்ள எதிஹாட் ரயிலின் உட்புற மற்றும் வெளிப்புற தோற்றத்தின் புகைப்படங்களை காணும்போது உலகத்தரம் வாய்ந்த உயர்ந்த தொழில்நுட்பத்தில், விமானத்திற்கு இணையான வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டிருப்பதை நம்மால் காண முடிகிறது.

ADVERTISEMENT

சில்வர் மற்றும் கிரே நிறத்திலான வண்ணங்களில் வடிவமைக்கப்பட்டிருக்கும் ரயில் பெட்டிகள் உள்ளே, விமான வகுப்புகளைப் போலவே பல்வேறு வகையான இருக்கை அமைப்புகளை காணலாம். மேலும் இந்த பெட்டிகள் முழுவதும் 2+2 என்ற வரிசையில் பயணிகள் அமர்ந்து செல்வதற்கான இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

எதிஹாட் ரயிலின் உட்புற தோற்றத்தின் மாதிரி புகைப்படம்

சில இருக்கைகளில் சாப்பிடுவதற்கும் படிப்பதற்கும் வசதியான விமானத்தை போன்று இருக்கைக்கு பின்னால் ஒரு தட்டு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகள் நேருக்கு நேர் அமர்ந்து செல்லும் வகையிலான இருக்கைகளுடன் கூடிய மேஜைகளும் உள்ளன. அது தவிர வீல்சேருக்கான பிரத்யேக இடம் மற்றும் உணவு, பானங்கள் பரிமாறுவதற்கான தனிப்பட்ட இடம் போன்றவையும் உள்ளது. இதனுடன் WIFI மற்றும் சார்ஜிங் பாயின்ட்கள் போன்ற மற்ற வசதிகளும் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
எதிஹாட் ரயிலின் உட்புற தோற்றத்தின் மாதிரி புகைப்படம்

UAE ரயில்வே திட்டத்தின் ஒரு பகுதியான ரயில் பயணிகள் சேவை, அதிவேக ரயில்களின் முக்கிய அம்சமான ஏரோடைனமிக் காட்டுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள 11 நகரங்களை இணைக்கும் இந்த பயணிகள் ரயில் மணிக்கு 200 கிமீ வேகத்தில் செல்லும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த ரயில் மூலம் அபுதாபியில் இருந்து துபாய்க்கு 50 நிமிடங்களிலும், அபுதாபியிலிருந்து ஃபுஜைராவிற்கு 100 நிமிடங்களிலும் பயணிக்கலாம். இந்த பயணிகள் ரயில் சேவை பயன்பாட்டிற்கு வந்ததும் 2030 ஆம் ஆண்டில், பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 36.5 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிஹாட் ரயிலின் வெளிப்புற தோற்றத்தின் மாதிரி புகைப்படம்

2021 டிசம்பரில் தொடங்கப்பட்ட Dh50 பில்லியன் UAE ரயில்வே திட்டமானது, நாடு முழுவதும் சரக்குகள் மற்றும் பயணிகளை கொண்டு செல்வதற்கான மிகப்பெரிய ஒருங்கிணைந்த அமைப்பாகும். இந்த திட்டத்தில் அமீரகத்தின் ஏழு எமிரேட் மற்றும் நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் தேசிய ரயில்வே திட்ட வலையமைப்பும் அறிவிக்கப்பட்டது. மேலும் இதில் சரக்கு ரயில், ரயில் பயணிகள் சேவைகள் மற்றும் ஒருங்கிணைந்த போக்குவரத்து சேவை என மூன்று முக்கிய திட்டங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.