ADVERTISEMENT

வீடியோ: இது ஒன்றும் உடைந்த கண்ணாடி அல்ல.. உறைநிலைக்கு சென்ற தண்ணீர்.. அமீரகத்தில் நிலவும் குளுகுளு வானிலை….

Published: 22 Jan 2022, 7:15 PM |
Updated: 22 Jan 2022, 8:12 PM |
Posted By: admin

அமீரகத்தில் கடந்த சில நாட்களாகவே வெப்பநிலை குறைந்து காணப்பட்டுள்ள நிலையில், ராஸ் அல் கைமாவில் உள்ள ஜெபல் ஜெய்ஸின் சில பகுதிகளில் இன்று வெப்பநிலையானது கிட்டத்தட்ட உறைநிலைக்கு பதிவாகியதால் அந்த பகுதிகளில் உறைபனி காணப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தேசிய வானிலை ஆய்வு மையத்தின்படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் சனிக்கிழமை காலை ஜெபல் ஜெய்ஸில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 1.3° C பதிவாகியுள்ளது.

NCM ஆல் வெளியிடப்பட்ட மற்றொரு வீடியோவின் படி, வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் ஜெபல் ஜெய்ஸில் -0.1 ° C வெப்பநிலை பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT

அமீரகத்தில் கடந்த ஒரு சில நாட்களாகவே அதிவேகத்துடன் காற்று வீசி, தூசிப்புயலை ஏற்படுத்துவதால் சாலைகளில் தெரிவுநிலை குறைந்து காணப்படுகிறது. இது பற்றி வானிலை மையம் குடியிருப்பாளர்களுக்கும் தினசரி எச்சரிக்கை விடுத்து வருகின்றது. தெரிவுநிலை பாதிக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் வாகனங்களை ஓட்டுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT