ADVERTISEMENT

அமீரகத்தில் இனி உங்களுக்கு கால் செய்யும் தனியார் நிறுவனங்களின் பெயரை முன்கூட்டியே அறிந்து கொள்ளலாம்… புதிய சேவை அறிமுகம்…

Published: 1 Jan 2022, 12:31 PM |
Updated: 1 Jan 2022, 12:52 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தின் தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் ஒழுங்குமுறை ஆணையம் (TDRA) மொபைல் போன்களில் உள்ள தனியார் நிறுவனங்களின் லேண்ட்லைன் அல்லது மொபைல் எண்களில் இருந்து அழைக்கும் அழைப்பாளரின் பெயரை அடையாளம் காணும் புதிய அம்சத்தை தொடங்கியுள்ளது.

ADVERTISEMENT

காஷிஃப் (Kashif) என தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் ஒழுங்குமுறை ஆணையத்தால் பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய முயற்சியின் மூலம், அமீரக குடியிருப்பாளர்கள் தங்களுக்கு ஏதேனும் ஒரு தனியார் நிறுவனத்தின் லேண்ட்லைன் எண்ணிலிருந்தோ அல்லது தனியார் நிறுவனத்தின் பெயரில் பதியப்பட்டுள்ள போஸ்ட்பெய்டு மொபைல் எண்ணிலிருந்தோ அழைப்பு வரும்போதே அந்த நிறுவனத்தின் பெயரை அறிந்து கொள்ள முடியும்.

அமீரகத்தில் தடங்கப்பட்டுள்ள இந்த புதிய முயற்சி குறித்து சமூக ஊடகங்களில் TDRA ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளது. அதில், “இப்போது, ​​#kashif அனைவருக்கும் கிடைக்கிறது!” என்றும் கூறியுள்ளது. மேலும் “வரவிருக்கும் காலத்தில் இந்த சேவை படிப்படியாக முழுமையாக பயன்படுத்தப்படும்” என்றும் TDRA தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இதன் மூலம் நீங்கள் தனியார் துறையினரின் லேண்ட்லைன் அல்லது போஸ்ட்பெய்டு தொடர்பு எண்களை உங்களின் மொபைல் ஃபோனில் சேமித்து வைத்துக்கொள்ளாமல் இருந்தாலும், உள்வரும் அழைப்பாளரின் முகவரியை காஷிஃப் முயற்சி அங்கீகரிக்கும்.

இந்த புதிய அம்சம் குடியிருப்பாளர்களால் பெறப்படும் தேவையற்ற அழைப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும் மற்றும் உள்வரும் அழைப்புக்கு பதிலளிக்கும் முன் நம்மை தொடர்பு கொள்ளும் அழைப்பாளரின் தகவலை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

 

View this post on Instagram

 

A post shared by TDRA تدرا (@tdrauae)