அமீரகத்தில் கொரோனாவிற்கான தடுப்பூசியானது சிறுவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் நிலையில் அபுதாபியில் 3 முதல் 16 வயது வரையிலான சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கும் புதிய சுகாதார மையம் தொடங்கப்பட்டுள்ளது.
அபுதாபி ஹெல்த் சர்வீசஸ் நிறுவனம் (SEHA), சுகாதாரம் மற்றும் தடுப்பு அமைச்சகம், அபுதாபியில் உள்ள சுகாதாரத் துறை மற்றும் அபுதாபி ஆரம்ப குழந்தை பருவ ஆணையம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் எத்திஹாட் ஹீரோஸ் ஹெல்த்கேர் சென்டரைத் (Ettihad Heroes Healthcare Centre) தொடங்கியுள்ளது.
மிகவும் திறமையான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களைக் கொண்ட ஒருங்கிணைந்த மருத்துவக் குழுவின் பணியாளர்களைக் கொண்ட இந்த மையம் திங்கள் முதல் வெள்ளி வரை அதிகாலை 1 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.