ADVERTISEMENT

அமீரகம்: குடியிருப்பாளர்களுக்கு அடுத்து வரவிருக்கும் நீண்ட நாள் பொது விடுமுறை…!! எப்போது…??

Published: 17 Jan 2022, 8:48 PM |
Updated: 18 Jan 2022, 8:28 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் புத்தாண்டு துவங்கியதுடன் சேர்த்து புதிய வார விடுமுறையும் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி ஜனவரி 1, 2022 முதல் வெள்ளிக்கிழமை அரை நாள், சனி மற்றும் ஞாயிறு ஆகியவை நாட்டில் அரசு ஊழியர்களுக்கான புதிய வார விடுமுறை நாட்கள் ஆகும்.

ADVERTISEMENT

இந்த மாற்றத்தின் காரணமாக பொது விடுமுறை நாட்களிலும் மாற்றம் இருக்கலாம் என கூறப்பட்டு வந்த நிலையில், அமீரகத்தில் அடுத்து வரவிருக்கும் பொது விடுமுறையான ஈத் அல் பித்ர் விடுமுறை நாட்கள் வானியல் கணக்கீடுகளை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது.

இருப்பினும் அதிகாரப்பூர்வமான தேதிகள் இஸ்லாமிய நாட்காட்டியை அடிப்படையாகக் கொண்டு பிறை பார்ப்பதைப் பொறுத்து அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

வானியல் கணக்கீடுகளின்படி, புனித ரமலான் மாதம் ஏப்ரல் 2, 2022 இல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாகவே இஸ்லாமிய மாதங்கள் பிறை பார்ப்பதைப் பொறுத்து 29 அல்லது 30 நாட்கள் நீடிக்கும். அதே போல் இந்த ஆண்டு, ரமலான் மே 1 வரை என 30 நாட்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பொருள் மே 2 இஸ்லாமிய பண்டிகையான ஈத் அல் பித்ரின் முதல் நாளாக இருக்கும்.

ஐக்கிய அரபு அமீரக நாட்காட்டியின்படி, குடியிருப்பாளர்களுக்கு ரமலான் 29 முதல் ஷவ்வால் 3 வரை அதிகாரப்பூர்வ ஈத் அல் பித்ர் விடுமுறை நாட்களாக இருக்கும். ஷவ்வால் என்பது இஸ்லாமிய நாட்காட்டியில் ரமலானுக்குப் பிறகு வரும் மாதமாகும்.

ADVERTISEMENT

இதன்படி ரமலான் 29 நாட்கள் நீடித்தால், குடியிருப்பாளர்களுக்கு நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கும் மற்றும் ரமலான் மாதம் 30 நாட்கள் நீடித்தால், அவர்களுக்கு ஐந்து நாட்கள் விடுமுறை கிடைக்கும்.

வானியல் ரீதியாகப் பார்த்தால், விடுமுறை நாட்கள் ஏப்ரல் 30 சனிக்கிழமை முதல், மே 4 புதன் வரை இருக்க சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.