ஐக்கிய அரபு அமீரகம் புத்தாண்டு துவங்கியதில் இருந்து புதிய வேலை நாட்களுக்கு மாறியுள்ளதால், VFS குளோபல் அபுதாபி மற்றும் துபாயில் உள்ள விசா விண்ணப்ப மையங்கள் (VACs) செயல்படும் நேரங்களிலும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த மையங்கள் புதிய செயல்பாட்டு நேரத்தை அறிவித்துள்ளது.
அதன்படி VAC திங்கள் முதல் வியாழன் வரை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். வெள்ளிக்கிழமைகளுக்கும் இதே நேரங்கள் பொருந்தும் எனினும் மதியம் 1 மணி முதல் 2.30 மணி வரை தொழுகைக்கான இடைவேளை வழங்கப்படும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த மையங்கள் மூடப்பட்டிருக்கும்.
இதனுடன் சேர்த்து வாடிக்கையாளர்களுக்கான VFS குளோபல் ஹெல்ப்லைனும் புதிய வேலை நாட்களுக்கு மாறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.