ADVERTISEMENT

UAE: 50% போக்குவரத்து அபராத தள்ளுபடியை மேலும் நீட்டித்த எமிரேட்…!!

Published: 9 Jan 2022, 5:07 AM |
Updated: 9 Jan 2022, 8:15 AM |
Posted By: admin

வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தில் வழங்கப்பட்டு வரும் 50 சதவீத தள்ளுபடி திட்டத்தை மேலும் சில நாட்களுக்கு நீட்டிப்பதாக ராஸ் அல் கைமா அறிவித்துள்ளது.  

ADVERTISEMENT

இதன் மூலம் வாகன ஓட்டிகள் இப்போது ஜனவரி 17, 2022 வரை இந்த தள்ளுபடியைப் பெற முடியும். முன்னதாக இந்த அபராத தள்ளுபடி ஜனவரி 3, 2022 அன்று முடிவடையத் திட்டமிடப்பட்டது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் பொன்விழாவைக் கொண்டாடும் ஒரு பகுதியாக கடந்த வருட டிசம்பரில், ராஸ் அல் கைமாவில் உள்ள அதிகாரிகள், வாகன ஓட்டிகள் போக்குவரத்து அபராதங்களில் 50 சதவீத தள்ளுபடி திட்டத்தைப் பெறலாம் என்று அறிவித்திருந்தனர்.

ADVERTISEMENT

இருப்பினும் கடுமையான போக்குவரத்து விதிமீறல்களிக்கு இது பொருந்தாது என்றும் அதே வேளையில், போக்குவரத்துப் புள்ளிகள் (black points) மற்றும் வாகனங்களை பறிமுதல் செய்வது ஆகிய குற்றங்களுக்கும் இந்த தள்ளுபடி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.