ADVERTISEMENT

அமீரகத்தில் கடந்த ஒரு நாளில் 2,511 பேருக்கு கொரோனா பாதிப்பு…!!

Published: 11 Jan 2022, 2:51 PM |
Updated: 11 Jan 2022, 3:51 PM |
Posted By: admin

அமீரகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை, ஜனவரி 11, 2022) வெளியிட்டுள்ள அறிவிப்பில் கடந்த ஒரு நாளில் மட்டும் 2,511 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 790,698 ஆக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

மேலும் அமீரகத்தில் இன்று கொரோனாவிற்கு 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமீரகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை  2,177 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஒரு நாளில் மட்டும் 795 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 754,688 கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அமீரகத்தில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள கொரோனா பாதிப்பால் அபுதாபியில் கடந்த சில மாதங்களுக்கு முன் வரை இருந்த கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டு அமீரகத்தின் பிற பகுதிகளில் இருந்து அபுதாபி பயணிப்பவர்களுக்கு கிரீன் பாஸ் வைத்திருத்தல் அவசியம் என்றும் EDE ஸ்கேனர்கள் மூலம் சோதனை செய்யப்பட்ட பின்னரே உள்நுழைய அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் திருமணங்கள், சமூக ஒன்றுகூடல் போன்றவற்றிற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் கிரீன் பாஸ் செயல்முறை, PCR சோதனை விதிமுறைகளிலும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT