ADVERTISEMENT

அமீரகத்தில் இன்று வானிலை தூசி மற்றும் குளிராக இருக்கும்… வானிலை மையம் தகவல்..!!

Published: 8 Feb 2022, 10:21 AM |
Updated: 8 Feb 2022, 10:21 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் செவ்வாய்க்கிழமை வானிலை தொடர்ந்து தூசி நிறைந்ததாகவும் குளிராகவும் இருக்கும் என்று தேசிய வானிலை துறை (NCM) தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இன்றைய வானிலை முன்னறிவிப்பில் அமீரகத்தில் தூசு நிறைந்ததாகவும் ஓரளவு மேகமூட்டத்துடனும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் அமீரகத்தின் சில பகுதிகளில் இன்று இரவு ஈரப்பதத்துடன் இருக்கும் மற்றும் கிழக்கு பகுதிகளில் புதன்கிழமை காலை மூடுபனி உருவாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஓமன் கடற்பகுதியில் கடல் அலைகள் 7 அடி உயரத்திற்கு எழும்புவதால் அப்பகுதிகளில் கடல் கொந்தளிப்பதற்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.