Uncategorized

UAE: ஈத், தீபாவளி உள்ளிட்ட 17 நிகழ்வுகளுக்கு சிறப்பு தள்ளுபடி, பொழுதுபோக்கு செயல்பாடுகளை வழங்கவுள்ள DFRE..!! தேதிகள் என்ன..??

துபாய் திருவிழாக்கள் மற்றும் சில்லறை விற்பனை நிறுவனம் (DFRE) 2022 ம் ஆண்டு முழுவதும் நடைபெறும் 17 முக்கிய நிகழ்வுகளுக்கான சிறப்பு விற்பனை நடைபெறவுள்ள புதிய தேதிகளை அறிவித்துள்ளது.

இந்த புதிய தேதிகள் ஐக்கிய அரபு அமீரகத்தின்   சனி-ஞாயிறு வார இறுதி விடுமுறை மாற்றத்திற்கு ஏற்ப உள்ளன. இந்த நிகழ்வுகளை முன்னிட்டு DFRE நகரம் முழுவதுமானபொழுதுபோக்கு நிகழ்வுகள், செயல்பாடுகளை நடத்தவிருக்கின்றன. துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவலின் 27வது பதிப்பு ஜனவரி 30 அன்று நிறைவடைந்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

DFRE இன் தலைமை நிர்வாக அதிகாரி அஹ்மத் அல் காஜா கூறுகையில், “நாங்கள் இந்த ஆண்டின் பிற்பகுதியை மிகவும் எதிர்நோக்குகி இருக்கிறோம், சில்லறை விற்பனைத் துறையில் நிலையான வளர்ச்சியை ஆதரிக்க ஐக்கிய அரபு அமீரகத்தில் புதிய வார இறுதி விடுமுறை தேதிகளுடன் முக்கிய நிகழ்வுகளின் காலெண்டரை நாங்கள் சீரமைத்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

முக்கிய நிகழ்வுகளுக்கான சிறப்பு விற்பனை தேதிகள்

● சம்மர் கலக்‌ஷன்: 2022 ம் ஆண்டு முதல் காலாண்டு முழுவதும்

● துபாயில் ரமலான் மற்றும் ஈத் (ஈத் அல் பித்ர்): ஏப்ரல் 2 முதல் மே 8 வரை

● துபாய் ஃபுட் ஃபெஸ்டிவல்: மே 2 முதல் 15 வரை

● 3-நாள் சூப்பர் விற்பனை: மே (தேதிகள் அறிவிக்கப்படும்)

● துபாய் சம்மர் சர்ப்ரைசஸ்: ஜூலை 1 முதல் செப்டம்பர் 4 வரை

● துபாயில் ஈத் (ஈத் அல் அதா): ஜூலை 10 முதல் 17 வரை

● பேக் டூ ஸ்கூல்: ஆகஸ்ட் 8 முதல் செப்டம்பர் 4 வரை

● வின்டர் கலக்‌ஷன்:2022 ம் ஆண்டு நான்காம் காலாண்டு முழுவதும்

● துபாய் ஹோம் ஃபெஸ்டிவல்: செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 13 வரை

● துபாய் ஃபிட்னஸ் சேலஞ்ச்: அக்டோபர் 29 முதல் நவம்பர் 27 வரை

● துபாயில் தீபாவளி: அக்டோபர் 14 முதல் 28 வரை

● 3-நாள் சூப்பர் விற்பனை: நவம்பர் (தேதிகள் அறிவிக்கப்படும்)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!