ADVERTISEMENT

வணிக நடவடிக்கைகளுக்கான அரசாங்க கட்டணத்தை குறைக்க துபாய் பரிசீலனை…!!

Published: 1 Feb 2022, 7:24 PM |
Updated: 1 Feb 2022, 7:29 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் கார்பரேட் வரியானது அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வரவுள்ள நிலையில் துபாய் அரசானது வணிக நிறுவனங்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

துபாயின் நிதித் துறையானது, வணிக லாபத்தின் மீதான கூட்டாட்சி கார்ப்பரேட் வரியை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து வணிக நடவடிக்கைகளுக்கான அரசாங்கக் கட்டணங்களைக் குறைப்பது குறித்து பரிசீலிக்கும் என்று துபாயின் நிதித்துறை இயக்குநர் ஜெனரல் அப்துல்ரஹ்மான் அல் சலே கூறியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் நிதியமைச்சகமானது அடுத்த ஆண்டு ஜூன் 1 முதல் வணிக இலாபத்தில் 9% கார்பரேட் வரி செலுத்துவது நடைமுறைக்கு வரும் என்றும் இது அமீரகத்தில் உள்ள சிறு வணிகங்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஆதரிக்கும் பொருட்டு அவைகளுக்கு 0% வரி விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இதன் காரணமாக வணிக நிறுவனங்கள் அரசிற்கு செலுத்தும் கட்டணங்களை குறைத்து அவர்களின் நிதிச்சுமையை குறைக்க இந்த பரிசீலனை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.