ADVERTISEMENT

UAE: இந்த வருட ரமலான் மாதம் துவங்கும் தேதி, நோன்பு வைக்கக்கூடிய நேரங்களை கணித்த வானியல் நிபுணர்…!!

Published: 20 Feb 2022, 6:01 PM |
Updated: 20 Feb 2022, 6:13 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் புனித ரமலான் மாதம் துவங்க இன்னும் ஒரு சில வாரங்களே இருக்கின்றது. இந்த ரமலான் மாதம் முழுவதும் இஸ்லாமியர்கள் பகலில் உணவு மற்றும் தண்ணீரைத் தவிர்த்து நோன்பிருப்பதால் அமீரகத்தில் பள்ளி மற்றும் அலுவலகங்கள் இயங்கும் நேரங்கள் குறைக்கப்படுகின்றன. அமீரகத்தில் இருக்கும் அலுவலகங்கள் அனைத்தும் மதிய வேளையோடு முடிவடையும்.

ADVERTISEMENT

வானியல் நிபுணர் ஒருவர் கூற்றுப்படி, ஏப்ரல் 2, 2022 ஆம் ஆண்டு புனித ரமலான் மாதத்தின் முதல் நாளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வானியல் கணக்கீட்டின்படி, இஸ்லாமிய நாட்காட்டியின் அடிப்படையில் பிறை பார்ப்பதன் மூலம் உண்மையான தேதி தீர்மானிக்கப்படும். மேலும் இஸ்லாமிய மாதங்கள் பிறையைப் பார்ப்பதைப் பொறுத்து 29 அல்லது 30 நாட்கள் நீடிக்கும்.

மேலும் இந்த ஆண்டு, ரமலான் மாதம் மே 1 வரை 30 நாட்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக மே 2 இஸ்லாமிய பண்டிகையான ஈத் அல் பித்ரின் முதல் நாளாக இருக்கும்என கூறப்படுகின்றது.

ADVERTISEMENT

வானியல் மற்றும் விண்வெளி அறிவியலுக்கான அரபு ஒன்றியத்தின் உறுப்பினரான இப்ராஹிம் அல் ஜர்வான், இந்த மாதத்தில் காலை முதல் மாலை வரை நோன்பு இருக்கும் நேரத்தையும் குறிப்பிட்டுள்ளார். ரமலான் மாதத்தின் தொடக்கத்தில் நோன்பு வைக்ககூடிய நேரங்கள் 13 மணி நேரம் 40 நிமிடங்களாக இருக்கும் என்றும், மாதம் முடியும் நேரத்தில், இது 14 மணி 20 நிமிடங்களாக அதிகரித்திருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அமீரகத்தில் ஈத் அல் ஃபித்ரை முன்னிட்டு குடியிருப்பாளர்களுக்கு ஐந்து நாட்கள் விடுமுறை கிடைக்கும்என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT