ADVERTISEMENT

குடும்பத்தை அமீரகத்திற்கு அழைத்து வர விரும்பிய வெங்கடேஷனின் கனவை நனவாக்கிய மஹ்சூஸ்..!! கிடைத்த 1 இலட்சம் திர்ஹம்ஸ் பரிசுத்தொகை..!!

Published: 18 Feb 2022, 3:41 PM |
Updated: 18 Feb 2022, 4:22 PM |
Posted By: admin

அமீரகத்தில் நடைபெற்ற 64வது வாராந்திர நேரடி மஹ்சூஸ் ரேஃபிள் டிராவில் மூன்று நபர்கள் 100,000 திர்ஹம் ரொக்கப்பரிசை வென்றுள்ளனர். அந்த மூன்று பேரில் 42 வயதான வெங்கடேசனும் ஒருவர் ஆவார். தனது குடும்பத்தை அமீரகத்திற்கு அழைத்து வர பல நாளாய் எண்ணிக்கொண்டிருந்தவருக்கு மஹ்சூஸ் டிராவானது ஒரு சிறந்த வாய்ப்பை பெற்று தந்துள்ளது.

ADVERTISEMENT

அபுதாபியைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிபுணரான வெங்கடேசன், தான் வெற்றி பெற்றதைத் தெரிவிக்கும் ஈமெயிலைப் பெற்றபோது அதிர்ச்சியும் உற்சாகமும் அடைந்ததாக கூறுகிறார். இது பற்றி அவர் கூறும்போது, “அந்த ஈமெயிலில் 100,000 திர்ஹம்கள் வெற்றி பெற்றுள்ளேன் என இருந்ததும் என்னால் நம்ப முடியவில்லை. என் கண்கள் என்னை ஏமாற்றவில்லை என்பதை உறுதிப்படுத்த நான் பூஜ்ஜியங்களை மீண்டும் மீண்டும் எண்ணினேன்” என்று கூறியுள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான அவர் இப்போது தனது வெற்றியின் மூலம் கிடைத்த பணத்தில், தனது குழந்தைகளையும் மனைவியையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் சிறிது காலம் தங்க வைக்க முடியும் என நம்பிக்கையுடன் கூறுகிறார். இதனை பற்றி தெரிவிக்கையில் “நான் நீண்ட காலமாக எனது குடும்பத்தை ஒரு முறை அமீரகத்திற்கு அழைத்து வர முயற்சித்து வருகிறேன். ஆனால் பண மிரச்சனை காரணமாக இதுவரை அது சாத்தியமாகவில்லை. இதனை நனவாக்க உதவிய, ​​மஹ்சூஸுக்கு நன்றி. இறுதியில் எனது குடும்பத்துடன் நான் அமீரகத்தில் தரமான நேரத்தை செலவிட முடியும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

மேலும், “எனது இரண்டு குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதே எனது முன்னுரிமை. அவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்குவதே நான் முதலில் அவர்களிடமிருந்து விலகி வாழத் தேர்ந்தெடுத்ததற்கான காரணங்களில் ஒன்றாகும். நான் அவர்களை கடைசியாகப் பார்த்து ஒரு வருடம் ஆகிறது” என்று அவர் கூறியுள்ளார். வெங்கடேசன் தனது பரிசுத் தொகையை கடன்களைத் தீர்க்கவும், நிதிப் பாதுகாப்பை அடையவும் பயன்படுத்தவிருப்பதாகவும் கூறியுள்ளார்.

64வது வாராந்திர மஹ்ஸூஸ் கிராண்ட் டிராவில் 20 வெற்றியாளர்கள் 1 மில்லியன் திர்ஹம் இரண்டாம் பரிசைப் பகிர்ந்து கொண்டனர். அதில் ஒவ்வொருவருக்கும் தலா 50,000 திர்ஹம்ஸ் கிடைத்துள்ளது.

ADVERTISEMENT

இதில் பங்குபெற விரும்புபவர்கள் www.mahzooz.ae மூலம் பதிவுசெய்து, 35 திர்ஹம்களுக்கு ஒரு பாட்டில் தண்ணீர் வாங்குவதன் மூலம் டிராவில் பங்கேற்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.