ADVERTISEMENT

UAE: கடன் பிரச்சனையுடன் இருந்த இந்தியருக்கு அடித்த 5 இலட்சம் திர்ஹம்ஸ் ரொக்கப்பரிசு…!!

Published: 9 Feb 2022, 3:11 PM |
Updated: 9 Feb 2022, 3:13 PM |
Posted By: admin

அபுதாபியில் இந்த மாதம் நடைபெற்ற பிக் டிக்கெட்டின் முதல் எலக்ட்ரானிக் டிராவில் இந்தியர் அனஸ் மேலத்தலக்கல் என்பவர் 500,000 திர்ஹம்களை வென்றுள்ளார்.

ADVERTISEMENT

கத்தாரில் வசித்து வரும் அனஸ், கடன் பிரச்சனையை எதிர்கொண்டுள்ளார். இந்த நிலையில் தற்பொழுது பிக் டிக்கெட்டில் வெற்றி பெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அவர் இப்போது பணத்தைப் பயன்படுத்தி தனது சொந்த ஊருக்கே சென்று சொந்தத் தொழிலைத் தொடங்கவும் திட்டமிட்டுள்ளார்.

இது பற்றி அவர் கூறுகையில், “நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இதற்கு முன்னர், நான் எனது நண்பர்களுடன் சேர்ந்து டிக்கெட்டுகளை வாங்கினேன், ஆனால் இந்த முறை டிக்கெட்டை நான் மட்டுமே வாங்கினேன்” என கூறியுள்ளார்.

ADVERTISEMENT

மேலும், மார்ச் 3-ம் தேதி நடைபெறவுள்ள நேரலை டிராவிலும் அவருக்கு வெல்வதற்கான வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT