அமீரகத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு அவசரகால சம்பவங்களில் விரைந்து செயலாற்றிய சிவில் பாதுகாப்புக் குழுவுக்கு துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான லெப்டினன்ட்-ஜெனரல் ஷேக் சைஃப் பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டு சம்பவங்களில் ஒன்று ஃபுஜைராவின் ரிஃபா பகுதியில் உள்ள ஒரு வில்லாவில் ஏற்பட்ட தீ விபத்தில் அந்த வில்லாவில் வசித்து வந்த ஒரு பெண்ணும் அவரது இரண்டு மாத குழந்தையும் பாதுகாப்புக் குழுவினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
அதே போல், ஃபுஜைராவில் 15 மீட்டர் ஆழமுள்ள கிணற்றில் விழுந்த ஆறு வயது சிறுமியும் பாதுகாப்புப் படையினரால் உடனடியாக மீட்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அச்சிறுமியின் உடல்நிலையை பரிசோதிக்க மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இந்த சிறுமி கிணற்றில் இருந்து காப்பாற்றப்பட்ட வீடியோவானது உள்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது நடந்த இந்த இரண்டு சம்பவங்களிலும் உடனடியாக செயல்பட்டு ஆபத்தில் இருந்து மீட்டதற்காக சிவில் பாதுகாப்புக் குழுவை உள்துறை அமைச்சர் பாராட்டியதுடன் நன்றி தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
أثنى سموه على جهود فريق الدفاع المدني
سيف بن زايد يطمئن على صحة طفلة إماراتية بعد سقوطها في بئرHH recognizes the Civil Defense team for the efforts
Saif bin Zayed reassures the health of an Emirati girl after she fell into a well pic.twitter.com/8wyluQrmZw
— وزارة الداخلية (@moiuae) February 21, 2022