ஐக்கிய அரபு அமீரகத்தின் மற்ற எமிரேட்டிலிருந்து அபுதாபிக்குள் நுழைய அல் ஹொஸ்ன் கிரீன் பாஸ் தேவை என்ற கட்டுப்பாடானது வரும் 28 பிப்ரவரி 2022 திங்கட்கிழமை முதல் நீக்கப்படுவதாக அபுதாபி அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரிடர் குழு அறிவித்துள்ளது.
மேலும் அபுதாபிக்குள் நுழையும் குடியிருப்பாளர்களை சோதனை செய்வதற்காக அபுதாபி பார்டரில் நடைமுறையில் இருந்த EDE ஸ்கேனர்கள் தேவைகளை அகற்றுவதற்கும் பேரிடர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கான சமூகத்தின் அர்ப்பணிப்பால் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் அமீரகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியதை அடுத்து அபுதாபிக்குள் நுழைய இந்த நுழைவு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் அபுதாபிக்குள் மால், பீச் போன்ற பொது இடங்களுக்குள் நுழைய அல் ஹொஸ்ன் கிரீன் பாஸ் தேவை என்ற விதி அமலில் இருந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
Abu Dhabi Emergency, Crisis and Disasters committee has approved the removal of EDE scanners and requirements for green pass to enter Abu Dhabi emirate from within the UAE, effective Monday, 28 February, 2022. Green pass will still be required to enter public spaces in Abu Dhabi. pic.twitter.com/CVP9BEvqNG
— مكتب أبوظبي الإعلامي (@admediaoffice) February 25, 2022