ADVERTISEMENT

அமீரகத்தில் கடந்த ஒரு நாளில் 1,615 பேருக்கு கொரோனா பாதிப்பு..!!

Published: 8 Feb 2022, 4:59 PM |
Updated: 8 Feb 2022, 5:00 PM |
Posted By: admin

அமீரகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 8, 2022) வெளியிட்டுள்ள அறிவிப்பில் கடந்த ஒரு நாளில் மட்டும் 1,615 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 860,976 ஆக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

மேலும் அமீரகத்தில் இன்று கொரோனாவிற்கு 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமீரகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,269 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஒரு நாளில் மட்டும் 2,219 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 788,861 கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT