ADVERTISEMENT

அமீரகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடும் ஏற்றம்.. மார்ச் மாதத்திற்கான விலையை நிர்ணயித்த எரிபொருள் குழு..!!

Published: 28 Feb 2022, 3:51 PM |
Updated: 28 Feb 2022, 3:51 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தின் எரிபொருள் விலை நிர்ணயிக்கும் குழுவானது வரும் மார்ச் 2022 ஆம் மாதத்திற்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இன்று திங்கள்கிழமை அறிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே ஏற்றம் கண்டு வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது இந்த முறை ஒரு லிட்டருக்கு மூன்று திர்ஹம்ஸையும் கடந்துள்ளது. அமீரகத்தில் பிப்ரவரி மாதம் வரையிலும் விலை ஏற்றமானது சிறிது சிறிதாக உயர்ந்து வந்த நிலையில் தற்போது கடும் விலை ஏற்றத்தை சந்தித்துள்ளது.

ADVERTISEMENT

எரிபொருள் குழுவின் மார்ச் மாத விலைப்பட்டியலின் படி, மார்ச் 1 ஆம் தேதி முதல், Super 98 வகை பெட்ரோல் விலையானது ஒரு லிட்டருக்கு 3.23 திர்ஹம்சாக நிர்ணயிக்கப்பட்டுளளது. ஆனால் இந்த வகை பெட்ரோலின் விலை நடப்பு மதமான பிப்ரவரியில் 2.94 திர்ஹம்சாக இருந்தது.

அடுத்ததாக ஸ்பெஷல் 95 வகையை சார்ந்த பெட்ரோல் விலையானது ஒரு லிட்டருக்கு 3.12 திர்ஹம்சாக நிர்ணயிக்கப்பட்டுளளது. இந்த வகை பெட்ரோலின் வர இம்மாதத்தில் 2.82 திர்ஹம்சாக இருந்தது.

ADVERTISEMENT

மூன்றாவது வகை பெட்ரோலான இ-பிளஸ் 91 பெட்ரோல் விலையானது தற்போது ஒரு லிட்டருக்கு 3.05 திர்ஹம்சாக நிர்ணயிக்கப்பட்டுளளது. இது 2.75 திர்ஹம்சாக மட்டுமே இந்த மாதத்தில் இருந்தது.

அதே சமயம் பிப்ரவரி மாதத்தில் ஒரு லிட்டருக்கு 2.88 திர்ஹம்சாக இருந்து வந்த டீசல் விலையானது மார்ச் மாத விலை பட்டியலில் 3.19 திர்ஹம்சாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT