ADVERTISEMENT

அமீரகத்தில் நாளை முதல் அமலுக்கு வரும் தளர்வுகள்…!! விரிவான தகவல்கள் உள்ளே..!!

Published: 14 Feb 2022, 8:20 PM |
Updated: 14 Feb 2022, 8:50 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஜனவரி 22 முதல் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் நாளொன்றுக்கு 3,000ஐ எட்டியதை அடுத்து சமீப காலமாக குறைந்து 1,500 க்குள் பதிவாகி வருகிறது. கொரோனா பாதிப்பானது குறைந்தபடி வருவதன் விளைவாக தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) நாளை பிப்ரவரி 15 முதல், கொரோனா வைரஸிற்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக ஒரு சில தினங்களுக்கு முன் அறிவித்தது.

ADVERTISEMENT

பிப்ரவரி 9, 2022 அன்று, NCEMA வெளியிட்ட அறிவிப்பில் மாநாடு, பொழுதுபோக்கு இடங்கள், ஷாப்பிங் சென்டர்கள், உணவகங்கள் மற்றும் கஃபேக்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பல்வேறு போக்குவரத்து வழிகளில் உள்ளவர்களின் திறன் பிப்ரவரி 15-ல் இருந்து உயர்த்தப்படும் என்று குறிப்பிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து நாளை முதல் நடைமுறைக்கு வரும் இடங்கள் மற்றும் வழிகாட்டுதல்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

>> சமூக நிகழ்வுகள்

திருமணங்கள், நிகழ்வுகள் மற்றும் இறுதிச் சடங்குகள் போன்ற சமூக நிகழ்வுகளுக்கு, நிகழ்வு நடக்கும் இடங்களின் முழு திறனில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

ADVERTISEMENT

இருப்பினும், ஒவ்வொரு எமிரேட்டும் வெவ்வேறு சமூக நிகழ்வுகளுக்கான செயல்பாட்டுத் திறனுக்கான சதவீதத்தைப் பற்றி முடிவு செய்யும்.

>> சினிமா

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள திரையரங்குகள் பிப்ரவரி 15 முதல் முழு திறனில் செயல்படத் தொடங்கும். இருப்பினும் ஒவ்வொரு எமிரேட்டும் சினிமா திறனை தங்களுக்கு ஏற்ற முறையில் மாற்றியமைத்துக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

>> விளையாட்டு மைதானங்கள்

அல் ஹோஸ்ன் செயலியின் கிரீன் பாஸ் நெறிமுறையைப் பராமரித்தால் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு பகுதிகள் 100 சதவீத திறனில் செயல்படலாம். புதிய வழிகாட்டுதல்களின்படி, அனைத்து பார்வையாளர்களும் தங்கள் Al Hosn செயலியில் கிரீன் பாஸ் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஸ்டேடியத்திற்குள் நுழைவதற்கு 96 மணிநேரத்திற்குள் பெறப்பட்ட எதிர்மறை PCR சோதனை முடிவை வைத்திருக்க வேண்டும்.

>> வழிபாட்டுத் தலங்கள்

புதிய விதிகளின்படி, மசூதிகள், தேவாலயங்கள், கோவில்கள் மற்றும் பிற வழிபாட்டுத் தலங்களில் வழிபாட்டாளர்களுக்கு இடையேயான சமூக விலகலானது இரண்டு மீட்டரில் இருந்து ஒரு மீட்டராக குறைக்கப்படும். பிப்ரவரி மாதத்தில் நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு, வழிபாட்டாளர்களுக்கிடையே பாதுகாப்பான தூரத்தைப் பேணுவது அல்லது ரத்து செய்வது குறித்த முடிவு ஆலோசிக்கப்படும்.

>> பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றவும்

தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் குடியிருப்பாளர்கள் முக கவசங்களை அணிந்து போதுமான சமூக தூரத்தை பராமரிக்க வேண்டும் மற்றும் அவர்களின் பாதுகாப்பிற்காக சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும் என்று ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

>> பூஸ்டர் தடுப்பூசி

கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்ற குடியிருப்பாளர்களை நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த பூஸ்டர் டோஸ்களை போட்டுக்கொள்ளுமாறு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

>> கிரீன் பாஸ்

NCEMA அறிவிப்பின்படி, பல்வேறு பொது இடங்களை அணுக அல் ஹோஸ்ன் செயலியில் கிரீன் பாஸ் பெற்றிருப்பது அவசியம். அத்துடன் ஒவ்வொரு எமிரேட்டிலும் உள்ள நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மைக் குழுக்கள் எமிரேட்டில் உள்ள திறனை நிர்ணயம் செய்வதற்கும், கடுமையான நடைமுறைகளை எளிதாக்குவதற்கும், நிலைமைக்கு ஏற்ப திறனை சரிசெய்வதற்கும் பொறுப்பேற்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.