ADVERTISEMENT

UAE: டிரைவர் வேலைக்கு ஆட்களை நியமிக்கவுள்ள RTA.. நாளை நடைபெறும் நேர்காணல்..!! விபரங்கள் உள்ளே..!!

Published: 10 Mar 2022, 6:45 PM |
Updated: 10 Mar 2022, 6:50 PM |
Posted By: admin

துபாயில் உள்ள சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) மார்ச் 11, 2022 வெள்ளிக்கிழமை முதல் டாக்ஸி ஓட்டுநர்களை வேலைக்கு நியமிக்கவுள்ளது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 2,000 திர்ஹம் வரை சம்பளம் மற்றும் பிற சலுகைகளை RTA வழங்கவிருக்கின்றது.

ADVERTISEMENT

இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்றும் இந்த முழு நேர வேலைக்கு ஆண் மற்றும் பெண் இருபாலரும் விண்ணபிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த வேலைக்கான நேர்காணல் மார்ச் 11 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த நேர்காணலில் கலந்து கொள்ள முடியாத விண்ணப்பதாரர்கள் தங்களின் CV-களை privilege.secretary@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் அல்லது 055-5513890 என்ற எண்ணிற்கு WhatsApp செய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு 2,000 திர்ஹம் சம்பளம் மற்றும் கமிஷன், சுகாதார காப்பீடு மற்றும் தங்குமிடம் வழங்கப்படும் என்றும் முக்கியமாக, துபாய் ஓட்டுநர் உரிமம் கட்டாயம்  வைத்திருப்பது அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

நேர்காணல் நடைபெறும் இடம்: 

சிறப்புத் தொழிலாளர் ஆட்சேர்ப்பு அலுவலகம் (Privilege Labour Recruitment Office) M-11, அபு ஹைல் சென்டர், தேரா,

நேரம்:

காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை வந்து கலந்துகொள்ளலாம்.

வயது:

23 மற்றும் 55 வயதுடைய விண்ணப்பதாரர்கள் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று ஆணையம் கோரியுள்ளது.