ADVERTISEMENT

அமீரகத்தில் இன்றைய வானிலை: தூசியாகவும் மேகமூட்டமாகவும் இருக்கும் என தேசிய வானிலை மையம் தகவல்…!!

Published: 9 Mar 2022, 9:05 AM |
Updated: 9 Mar 2022, 9:06 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (புதன்கிழமை) வானிலை தூசி நிறைந்ததாகவும் ஓரளவு மேகமூட்டமாகவும் இருக்கும் என்று தேசிய வானிலை துறை (NCM) தெரிவித்துள்ளது. 

ADVERTISEMENT

கடந்த ஒரு சில நாட்களாகவே தூசிப்புயல் அமீரகத்தில் பரவலாக இருந்து வரும் நிலையில் இன்றைய வானிலை முன்னறிவிப்பிலும் வானம் தூசி நிறைந்ததாகவும் பொதுவாக ஓரளவு மேகமூட்டமாகவும் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

நாட்டின் சில பகுதிகளில் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் லேசானது முதல் மிதமானது வரை தென்கிழக்கு முதல் வடகிழக்கு வரை காற்று வீசும் என்றும் பகல் நேரத்தில் தூசியுடன் வீசும் என்றும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இதனால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் வாகனங்களை ஓட்டுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.