ADVERTISEMENT

துபாயில் கொரோனா டிரைவ் த்ரூ சேவை மையத்தை நிரந்தரமாக மூடிய SEHA…!!

Published: 11 Mar 2022, 5:09 AM |
Updated: 11 Mar 2022, 9:10 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகப்பெரிய ஹெல்த்கேர் நெட்வொர்க்கான அபுதாபி ஹெல்த் சர்வீசஸ் கம்பெனி (SEHA), துபாயின் சிட்டி வாக்கில் உள்ள தனது கொரோனா டிரைவ்-த்ரூ சேவை மையத்தை நிரந்தரமாக மூடியுள்ளது.

ADVERTISEMENT

இதனால் துபாயில் PCR சோதனைகள் அல்லது தடுப்பூசிகளை மேற்கொள்ள வேண்டிய குடியிருப்பாளர்கள் Seha செயலியைப் பயன்படுத்தி அல் கவானீஜில் உள்ள Seha-வின் கொரோனா டிரைவ்-த்ரூ சேவை மையங்களில் அப்பாய்மெண்ட்டை முன்பதிவு செய்து கொள்ளுமாறு குடியிருப்பாளர்களை Seha கேட்டுக்கொண்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் பதிவாகி வரும் குறைவான கொரோனா தொற்றிற்கு பிறகு இந்த டிரைவ் த்ரூ சேவை மையம் மூடப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஒரு சில நாட்களாக அமீரகத்தில் 400 க்கும் குறைவாகவே தினசரி கொரோனா பாதிப்புகள் பதிவாகி வருவது குறிப்பிடத்ததக்கது.

ADVERTISEMENT