ADVERTISEMENT

ஷார்ஜாவில் புதிதாக கட்டப்பட்ட பிரம்மாண்ட க்ளாக் டவரை திறந்து வைத்த ஆட்சியாளர்..!!

Published: 17 Mar 2022, 4:32 PM |
Updated: 17 Mar 2022, 4:35 PM |
Posted By: admin

ஷார்ஜாவில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும் ஷார்ஜா எமிரேட்டின் தோற்றத்தை மேலும் அழகாக்கவும் பல்வேறு சிறப்பு திட்டங்கள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக ஷார்ஜாவில் இருக்கும் கடலோர நகரமான கல்பாவில் பிரமிக்க வைக்கும் புதிய க்ளாக் டவர் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அமீரகத்தின் சுப்ரீம் கவுன்சில் உறுப்பினரும் ஷார்ஜாவின் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் டாக்டர் சுல்தான் பின் முஹம்மது அல் காசிமி அவர்கள், கல்பாவில் இந்த கிளாக் டவரை வியாழக்கிழமை திறந்து வைத்துள்ளார்.

ADVERTISEMENT

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த திட்டத்திற்கு ஷார்ஜா ஆட்சியாளர் அடிக்கல் நாட்டியிருந்தார். 42 மீட்டர் நீளமுள்ள இந்த க்ளாக் டவர் நகரின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பார்க்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT