துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) இன்ஃபினிட்டி பிரிட்ஜ் மற்றும் புதிய பாலங்களை சுரங்கப்பாதையுடன் இணைக்கும் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, வரும் ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 13 அன்று, தேராவில் இருந்து பர் துபாய் வரையிலான போக்குவரத்திற்காக ஷிண்டகா சுரங்கப்பாதையை மீண்டும் திறப்பதாக அறிவித்துள்ளது.
துபாயின் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த ஷிண்டகா சுரங்கப்பாதையானது மேம்பாட்டு பணிகளுக்காக இரு மாதங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டு அதன்படி கடந்த ஜனவரி 16 அன்று மூடப்பட்டது. மேலும் இந்த பாதை மூடப்பட்டதை தொடர்ந்து மாற்றுவழியையும் RTA அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஷிண்டகா சுரங்கப்பாதை மீண்டும் திறக்கப்பட்டு, ஷிண்டகா காரிடாரில் உள்ள புதிய பாலங்களுடன் இணைப்பதன் மூலம், ஒரு மணி நேரத்திற்கு 3,000 வாகனங்கள் செல்லும் அளவிற்கு சாலையின் திறன் அதிகரிக்கும் என்றும், இதன் மூலம் ஒரு மணி நேரத்திற்கு 15,000 வாகனங்கள் செல்லும் அளவிற்கு மொத்த திறனானது வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேராவில் இருந்து பர் துபாய் வரையிலான திசையில் ஷிந்தகா சுரங்கப்பாதை மீண்டும் திறக்கப்படுவதன் மூலம் தேராவில் இருந்து சீரான போக்குவரத்தை உறுதிசெய்ய, RTA அப்பகுதியில் உள்ள திசை அடையாளங்களில் (direction signs) மாற்றங்களைச் செய்துள்ளது.
அதே நேரத்தில் பர் துபாயிலிருந்து தேரா வரையிலான திசையில் ஷிண்டகா சுரங்கப்பாதையில் போக்குவரத்து இயக்கம் அப்படியே இருக்கும் மற்றும் சாலைப் பயனாளர்களுக்கு இது திறந்திருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் RTA வாகன ஓட்டிகளுக்கு வேக வரம்புகளைக் கடைப்பிடிக்குமாறும், அவர்கள் செல்லும் இடங்களுக்கான திசைக் குறியீடுகளை (directional signs) பின்வருமாறு கடைப்பிடிக்குமாறும் அழைப்பு விடுத்துள்ளது.
அவை
– ஃபால்கன் ஜங்ஷனுக்கு செல்லும் போக்குவரத்து இயக்கத்திற்கு பாலத்தின் 2-வது எக்ஸிட்டில் (BR2) வலதுபுறமாக நகர வேண்டும்.
– ஜுமேராவின் திசையில் உள்ள போக்குவரத்து இயக்கமானது பாலத்தின் இடதுபுறமாக இருக்கும் ஒற்றைப் பாதை கொண்ட எக்ஸிட் (BR1) வழியாக சென்று, ஜுமேராவின் திசையில் உள்ள 3-வழி வடக்குப் பாலத்தின் வழியாக ஃபால்கன் ஜங்ஷனை கடக்க வேண்டும்.
— ஷிண்டகா சுரங்கப்பாதை வழியாக ரவுண்டானாவில் இருந்து உள்வரும் போக்குவரத்து, இன்ஃபினிட்டி பிரிட்ஜிற்கு செல்லும் வலதுபுறப் பாதையை எடுத்துக்கொண்டு தேராவிற்கு செல்லலாம் அல்லது ஃபால்கன் ஜங்ஷனின் திசையில் பாலம் (BR2) வழியாக பர் துபாய் மற்றும் ஜுமேராவுக்கு நேரடியாகச் செல்லலாம்.
– அல் மம்சார், அல் கலீஜ் ஸ்ட்ரீட் மற்றும் ஒமர் பின் அல் கத்தாப் ஸ்ட்ரீட் ஆகியவற்றிலிருந்து வரும் போக்குவரத்து, தேரா பக்கத்திலிருந்து வரும் திசை அடையாளங்களைப் (direction signs) பின்தொடர்ந்து இன்ஃபினிட்டி பிரிட்ஜ் அல்லது ஷிண்டகா சுரங்கப்பாதை வழியாக பர் துபாய் மற்றும் ஜுமேராவுக்குச் செல்லலாம்.
– பாம் தேரா மெட்ரோ நிலையம் மற்றும் கார்னிச் ஸ்ட்ரீட்டில் இருந்து வரும் போக்குவரத்து கார்னிச் ஸ்ட்ரீட்டின் மேல் தளம் வழியாக இன்ஃபினிட்டி பிரிட்ஜின் நுழைவாயிலுக்குச் செல்லலாம்.