ADVERTISEMENT

அமீரகத்தில் இன்று 40°C வரை வெப்பநிலை உயரும்…!! தேசிய வானிலை மையம் தகவல்…!!

Published: 24 Mar 2022, 8:34 AM |
Updated: 24 Mar 2022, 8:35 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் சமீப நாட்களாக வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இன்றைய வானிலை நிலவரப்படி அமீரகத்தின் சில உள் பகுதிகளில் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தேசிய வானிலை ஆய்வு மையத்தின்படி, பகலில் வானிலை வெப்பமாக இருக்கும் என்றும், வானம் பொதுவாக காற்றாகவும், சில நேரங்களில் ஓரளவு மேகமூட்டமாகவும் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது .

சில கடலோரப் பகுதிகளில் இரவு மற்றும் வெள்ளிக்கிழமை காலை வேளைகளில் ஈரப்பதத்துடன் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT