ஷார்ஜாவில் உள்ள அதிகாரிகள் ரமலான் மாதத்தில் அரசு நிறுவனங்களுக்கான வேலை நேரங்களை அறிவித்துள்ளனர். ஐக்கிய அரபு அமீரக அரசானது கடந்த வாரம் அரசு நிறுவனங்களுக்கான வேலை நேரங்களை அறிவித்ததையடுத்து, ஷார்ஜா தனது எமிரேட்டில் இருக்கும் அரசு நிறுவனங்களுக்கான வேலை நேரங்களை அறிவித்துள்ளது.
ஷார்ஜாவின் மனிதவளத் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ரமலான் மாதத்தின் உத்தியோகபூர்வ வேலை நேரங்கள் காலை 9 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை இருக்கும் என்றும் ஷிப்டுகளில் செயல்படும் நிறுவனங்கள் அதற்கேற்ப வேலை நேரத்தை நிர்ணயிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமீரகம் குறுகிய வேலை நாட்களாக, வாரத்தில் 4.5 நாள் வேலை நாட்களாகவும் வெள்ளிக்கிழமை அரை நாள், சனி, ஞாயிறு என இரண்டரை நாட்களை வார விடுமுறை நாட்களாகவும் அறிவித்தது. அதே நேரத்தில் ஷார்ஜா வெள்ளிக்கிழமையும் முழுநாள் விடுமுறை அளித்து மூன்று நாள் வார விடுமுறை நாட்களாக அறிவித்தது. இதன் காரணமாக ரமலான் மாதத்தில் வார வேலை நாட்கள் அனைத்துமே மதியம் 2.30 மணியுடன் முடிவடையும் என கூறப்பட்டுள்ளது.
வானியல் கணக்கீடுகளின்படி, ஏப்ரல் 2, 2022-ம் ஆண்டில் முதல் நாளைக் குறிக்கும். மேலும் இந்த ஆண்டு, ரமலான் மே 1 வரை 30 நாட்கள் நீடிக்கும் என்றும் மே 2 இஸ்லாமிய பண்டிகையான ஈத் அல் ஃபித்ரின் முதல் நாளாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இது பிறை பார்பபதை பொறுத்தே உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.