அமீரக சட்டங்கள்

UAE: இன்டர்செக்‌ஷனில் தவறான பாதையில் சென்றால் 400 திர்ஹம் அபராதம்..!! எச்சரிக்கும் காவல்துறை..!!

அபுதாபி காவல் துறையினர் போக்குவரத்து பாதை மற்றும் இன்டர்செக்‌ஷன்களை கடக்கும்போது அதன் விதிகளை கடைபிடிக்கத் தவறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

குறிப்பாக, லேன் விதிமுறைகளைப் பின்பற்றாத வாகன ஓட்டிகளுக்கு இப்போது 400 திர்ஹம் அபராதம் விதிக்கப்படுகிறது. அதாவது, சிக்னல் இருக்கக்கூடிய இன்டர்செக்ஷனில் இடதுபுறம் திரும்பும் பாதையைத் தவிர்த்து மற்ற பாதையை பயன்படுத்தி இடதுபுறமாகச் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இத்தகைய அபராதம் விதிக்கப்படுகிறது.

சமூக வலைதள பதிவில் இந்த அபராதம் குறித்து வாகன ஓட்டிகளை எச்சரித்த காவல்துறையினர், வாகன ஓட்டிகள் இன்டர்செக்‌ஷனில் இடதுபுறம் திரும்புவதற்கான பாதை அல்லாது மற்ற பாதையில் நேராக செல்லத் தவறினால் 400 திர்ஹம் அபராதம் பொருந்தும் என்று கூறியுள்ளனர்.

பாதை (lane) விதிமுறைகள்

லேன் தொடர்பான விதிமுறைகளைப் பின்பற்றத் தவறினால் ஏற்படும் அபாயங்களைக் காட்டும் பல வீடியோக்களை சமூக ஊடகங்களில் அபுதாபி காவல்துறை வெளியிட்ட பிறகு, கடந்த மாதம் முதல் அபுதாபியில் லேன் ஒழுங்குமுறை தொடர்பான அபராதங்கள் கடுமையாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும் இன்டர்செக்‌ஷன்களில் லேன் விதிமுறைகளுடன் கூடுதலாக, வாகன ஓட்டிகள் ஒரு வாகனத்தின் இடதுபுறத்தில் இருந்து மட்டுமே முந்திச் செல்ல வேண்டும் என்றும், முந்திச் செல்லும் வாகனங்கள் மற்றும் மற்றொரு பாதையுடன் இணையும் போது பின்னால் வரும் வாகனங்கள் முந்திச் செல்லவும் வழிவகை செய்ய வேண்டும் என்றும் காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல், வலதுபுறத்தில் இருந்து மற்ற வாகனங்களை முந்திச் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு 600 திர்ஹம் அபராதம் மற்றும் ஆறு போக்குவரத்து கருப்பு புள்ளிகள் விதிக்கப்படும் என்றும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Related Articles

Back to top button
error: Content is protected !!