ADVERTISEMENT

UAE: ஷார்ஜாவில் அறிமுகமாகும் 5 திர்ஹம் டாக்ஸி முன்பதிவு சேவை..!!

Published: 4 Apr 2022, 11:01 PM |
Updated: 5 Apr 2022, 9:22 AM |
Posted By: admin

ஷார்ஜா சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (SRTA) வழக்கமான பயணிகள், குடும்பங்கள், பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்காக 5 திர்ஹம் டாக்ஸி முன்பதிவு சேவையை அறிவித்துள்ளது. வாகனங்களை முன்பதிவு செய்ய விரும்புவோருக்கு அவர்களின் தேவைக்கேற்ப பொருத்தமான வாகனங்களை வழங்குவதை இது நோக்கமாக கொண்டுள்ளது. மேலும் போக்குவரத்து அமைப்புகள் துறை அதன் பயனாளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய தொடர்ந்து முயற்சித்து வருவதை தொடர்ந்து இந்த புதிய சேவை தொடங்கபட்டுள்ளதாக SRTA உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இந்த சேவைக்கு 5 திர்ஹம் கட்டணம் விதிக்கப்படும் என்றும், அதே நேரத்தில் சேவையை முடிக்க எடுக்கும் நேரம் வாகனத்தின் வகையைப் பொறுத்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமான அல்லது குடும்ப வாகனங்களுக்கு இந்த சேவை 30 நிமிடங்கள் வழங்கப்படும், அதே நேரத்தில் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சேவையானது ஒரு மணி நேரம் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.  இந்த சேவையை வாடிக்கையாளர்கள் இணையதளம் அல்லது 600525252 என்ற எண்ணிற்கு அழைத்து முன்பதிவு செய்யலாம், மற்றும் அரசுத் துறைகள், மருத்துவமனைகள் மற்றும் ஹோட்டல்களில் கிடைக்கும் தானியங்கி பேஜர் சாதனம் மூலமாகவும் சேவையை முன்பதிவு செய்யலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சேவையை முன்பதிவு செய்யும் போது, ​​வாடிக்கையாளரின் இருப்பிடம், தொடர்பு எண், முன்பதிவு செய்த தேதி மற்றும் நேரம் மற்றும் வாகனத்தின் வகை ஆகியவற்றை உள்ளடக்கிய தரவுகளின் தொகுப்பை வாடிக்கையாளர் குறிப்பிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.