ஷார்ஜா சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) ஷார்ஜாவின் நான்காவது தொழிற்துறை பகுதியில் ஷேக் முகமது பின் சையத் ஸ்ட்ரீட்டில் இருந்து அல்-கவாசாத் சந்திப்பை நோக்கிய திசையில் இருக்கும் ஷேக் கலீஃபா பின் சையத் ஸ்ட்ரீட்டில் உள்ள அபு ஷகரா சுரங்கப்பாதையின் வலது பாதையை மூடுவதாக அறிவித்துள்ளது.
இந்த மூடலானது ஏப்ரல் 9 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி ஏப்ரல் 12 ஆம் தேதி அதிகாலை 5 மணி வரை அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
ஷார்ஜாவின் போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பை தொடர்ந்து வாகன ஓட்டிகள் இதற்கேற்றவாறு தங்களின் பயணங்களை திட்டமிடவும் கவனத்துடன் வாகனம் ஓட்டுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.