ADVERTISEMENT

துபாயில் இயக்கப்படும் விமானங்களை DWC மற்றும் ஷார்ஜா விமான நிலையங்களுக்கு மாற்றிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்..!! காரணம் இதுதான்..!!

Published: 26 Apr 2022, 6:34 AM |
Updated: 26 Apr 2022, 9:15 AM |
Posted By: admin

இந்தியாவின் பட்ஜெட் கேரியரான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் விமானங்களை துபாய் சர்வதேச விமான நிலையத்தில் (DXB) இயக்கப்படுவதற்கு பதிலாக துபாயின் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம் மற்றும் ஷார்ஜா விமான நிலையங்களில் இருந்து மே மற்றும் ஜூன் மாதங்களில் சில விமானங்களை இயக்குவதாக திங்களன்று அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் (DXB) வடக்கு ஓடுபாதை மூடப்படுவதே இதற்குக் காரணம் என்று விமான நிறுவனம் அந்த அறிவிப்பில் கூறியுள்ளது.

இது பற்றி தெரிவிக்கையில், “வரும் மே மற்றும் ஜூன் மாதங்களில் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் வடக்கு ஓடுபாதை மூடப்படுவதால், இந்த காலகட்டத்தில் சில விமானங்கள் ஷார்ஜா மற்றும் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்திற்கு (துபாய் வேர்ல்ட் சென்ட்ரல் – DWC) திருப்பி விடப்படும்” என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

மேலும், “துபாய் விமான நிலையத்திற்குச் செல்லும் மற்றும் துபாய் விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானங்களை ஏற்கனவே முன்பதிவு செய்த பயணிகள் எங்கள் தொடர்பு மையம்/நகர அலுவலகங்கள் மூலம் புதிய விமானங்களை மீண்டும் முன்பதிவு செய்ய வேண்டும்” என்றும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் புதிய துபாய் வேர்ல்ட் சென்ட்ரல் (DWC) மற்றும் ஷார்ஜா விமான நிலையங்களுக்கு இயக்கப்படும் விமானங்களின் அட்டவணையையும் வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

சர்வதேச பயணத்திற்கான உலகின் பரபரப்பான விமான நிலையமான துபாய் விமான நிலையத்தில் உள்ள வடக்கு ஓடுபாதை, பராமரிப்பு பணிக்காக மே 9 முதல் ஜூன் 22 வரை 45 நாட்களுக்கு மூடப்படும் என்று துபாய் ஏர்போர்ட்ஸ் கடந்த மாதம் தெரிவித்திருந்தது.

தொடர்ந்து “வழக்கமான ஓடுபாதை பராமரிப்பு வாராந்திர அடிப்படையில் திட்டமிடப்பட்டாலும், திட்டமிடப்பட்டதைப் போன்ற விரிவான மேம்படுத்தல்களுக்கு ஓடுபாதையை முழுமையாக மூட வேண்டும்” என்றும் துபாய் ஏர்போர்ட்ஸ் தெரிவித்திருந்தது.

இதேபோன்று துபாயை மையமாக கொண்டு இயங்கும் விமான நிறுவனமான ஃப்ளைதுபாய், “பயணிகளின் பயணத் திட்டங்களுக்கு இடையூறுகளை குறைப்பதற்காக, DWC இலிருந்து 34 இடங்களுக்கு விமானங்களை இயக்கும்” என ஏற்கெனவே தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.