ADVERTISEMENT

UAE ரமலான்: இஃப்தார் கனான் ஃபயரிங்கை காண குடியிருப்பாளர்களை அழைக்கும் துபாய் காவல்துறை..!!

Published: 15 Apr 2022, 8:03 AM |
Updated: 15 Apr 2022, 9:42 AM |
Posted By: admin

துபாயின் அல் மன்கூல் பகுதியில் உள்ள ஈத் தொழுகை மைதானத்தில் கனான் ஃபயரிங் என்று சொல்லக்கூடிய நோன்பு கால இஃப்தார் பீரங்கி சுடுவதைக் காண துபாய் காவல்துறை குடியிருப்பாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. ஏப்ரல் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் இங்கு கனான் ஃபயரிங் நிகழ்த்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தின் அதிகாலையில் நோன்பு வைத்து சூரியன் மறையும் நேரத்தில் தங்களின் நோன்பை முடித்துக்கொள்ளும் இஃப்தார் நேரங்களில்
பீரங்கி சுடும் முறையானது அமீரகத்தில் இருந்து வருகிறது. இது 1960 களின் முற்பகுதியில் இருந்து நடைமுறையில் உள்ள ஒரு பிரபலமான பாரம்பரியமாகும்.

இந்த ஆண்டு, துபாய் காவல்துறை துபாய் முழுவதும் பீரங்கிகளை ஐந்து இடங்களில் நிறுத்தியுள்ளது. அவை அட்லாண்டிஸ் தி பாம், புர்ஜ் கலீஃபா, அல் சீஃப், சென்ச்சுரி மால் துபாயில் உள்ள அல் வஹெதா, ஹத்தாவில் உள்ள எமிரேட்ஸ் கூட்டுறவு சங்கம் மற்றும் ஹத்தா ஹில் பார்க் ஆகும்.

ADVERTISEMENT

அத்துடன் துபாய் முழுவதும் பல பகுதிகளில் மொபைல் கனான் ஃபயரிங்கும் நிகழ்த்தப்படுகிறது. அவை

  • அல் சத்வாவின் பெரிய மசூதிக்கு அருகில்
  • அல் கூஸ் பகுதியில் அல் அன்பியா மசூதிக்கு அருகில்
  • அல் லிசைலியின் அல் நஹ்தா தேசிய பள்ளிக்கு அருகில்
  • லெஹ்பாப் பகுதியின் லெஹ்பாப் கம்யூனிட்டி பார்க் 1 அருகில்
  • அல் அவீர் ஷேக் ஹம்தான் மசூதிக்கு அருகில்
  • அல் கவானீஜில் உள்ள அஹ்மத் அல் ஹப்பாய் மசூதிக்கு அருகில்
  • முஹைஸ்னாவில் இருக்கும் அப்துல் ரஹீம் முகமது kti மசூதிக்கு அருகில்