ADVERTISEMENT

அமீரகத்தில் மூடுபனி எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்..!! வாகன ஓட்டிகள் கவனத்துடன் ஓட்டுமாறும் அறிவுறுத்தல்..!!

Published: 5 Apr 2022, 7:11 AM |
Updated: 5 Apr 2022, 7:12 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தின் சில பகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை காலை மூடுபனி எச்சரிக்கை விடுத்துள்ள அதிகாரிகள், முக்கிய சாலைகளில் வேகத்தைக் குறைத்து எச்சரிக்கையுடன் வாகனங்களை ஓட்டுமாறு வாகன ஓட்டிகளை வலியுறுத்தியுள்ளனர்.

ADVERTISEMENT

மூடுபனி காரணமாக முக்கிய சாலைகளில் தெரிவுநிலை (visibility) குறைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளின் பாதுகாப்பிற்காக அபுதாபி காவல்துறை வேக வரம்பை 80 கிமீ வேகமாக குறைத்துள்ளது. இந்த மூடுபனி காலை 9.30 மணி வரை நீடிக்கும் என தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இன்றைய வானிலை முன்னறிவிப்பில் சில சமயங்களில் வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. அத்துடன் இரவு மற்றும் புதன்கிழமை காலை சில கடலோரப் பகுதிகளில் மூடுபனி உருவாகும் என்றும் லேசானது முதல் மிதமான காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT