ADVERTISEMENT

UAE: பிக் டிக்கெட்டின் வாராந்திர டிராவில் 3 லட்சம் திர்ஹம்ஸ் வென்ற இந்தியர்.. 2 வயது மகனால் அடித்த அதிர்ஷ்டம்..!!

Published: 24 Apr 2022, 10:04 PM |
Updated: 25 Apr 2022, 7:36 AM |
Posted By: admin

அபுதாபியில் ஒவ்வொரு மாதமும் நடைபெற்று வரும் பிக் டிக்கெட்டின் இந்த மாதத்திற்கான வாராந்திர டிராவில், தனது இரண்டு வயது மகனால் தேர்ந்தெடுக்கப்பட்ட டிக்கெட் எண்ணை வாங்கி வைத்திருந்த இந்தியருக்கு 300,000 திர்ஹம் பரிசுத்தொகை கிடைத்துள்ளது.

ADVERTISEMENT

கத்தாரில் வசிக்கும் தாரிக் ஷேக் எனும் நபர், வாராந்திர டிராவில் தனது வெற்றி குறித்து கூறுகையில் கடந்த ஒரு வருடமாக ஒவ்வொரு மாதமும் தனது நண்பர்களுடன் சேர்ந்து பிக் டிக்கெட்டுகளை வாங்கி வருவதாக கூறியுள்ளார். மேலும் புனித ரமலான் மாதத்தில் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கூறுகையில், எனது நண்பர்கள் சிலருக்கு உண்மையிலேயே பணம் தேவைப்படுகிறது. எனவே இது சரியான நேரம். இந்த பரிசுத்தொகையின் மூலம் எனது நண்பர் ஒருவர் அடுத்த மாதம் நடைபெறவுள்ள அவரது சகோதரியின் திருமணத்திற்கு உதவ முடியும் என்று தெரிவித்துள்ளார். மேலும் வாராந்திர டிராவில் பங்குபெறும் வாய்ப்பை பெறுவதற்காக தாமதமாக இல்லாமல் இந்த மாத தொடக்கத்திலேயே டிக்கெட்டை வாங்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

அத்துடன் இந்த முறை அவரின் இரண்டு வயது மகனை தற்செயலாக ஒரு டிக்கெட் எண்ணைத் தேர்வு செய்ய வைத்ததாகவும், அவர் 108475 என்ற வெற்றி எண்ணைத் தேர்ந்தெடுத்தாகவும் கூறும் தாரிக், என் மகன் வெற்றி எண்ணை எடுத்ததன் பலனாக இன்று நான் வெற்றி பெற்றுள்ளேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மாதத்தின் ஒவ்வொரு வாரமும் நடைபெறும் பிக் டிக்கெட்டிற்கான இந்த மாத வாராந்திர மின்னணு டிராவின் மூன்றாவது வெற்றியாளர் தாரிக் ஆவார். வாராந்திர டிராவில் வெற்றி பெற்றிருப்பினும், வரும் மே மாதம் 3 ம் தேதி நடைபெறவுள்ள ஏப்ரல் மாதத்திற்கான 12 மில்லியன் திர்ஹம்ஸ் கிராண்ட் பரிசுத்தொகைக்கான டிராவிலும் இந்த டிக்கெட் பங்குபெறும். அதிலும் தாரிக் வெற்றி பெற்றால் மீண்டும் அவருக்கு பரிசாக 12 மில்லியன் திர்ஹம்ஸ் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT