வளைகுடா செய்திகள்

ஓமான்: நாளை ஷவ்வால் மாத பிறையை பார்க்குமாறு குடியிருப்பாளர்களை கேட்டுக்கொண்ட அதிகாரிகள்..!!

ஓமானில் ஷவ்வால் மாதத்தின் பிறையைக் கண்டறியும் பிறை பார்க்கும் குழு, ஞாயிற்றுக்கிழமை, மே 1, 2022 அன்று பிறை பார்க்குமாறு குடிமக்களையும் குடியிருப்பாளர்களையும் கேட்டுக்கொண்டுள்ளது.

இஸ்லாமிய நாட்காட்டியின் 1443 ஆம் ஆண்டிற்கான ஷவ்வால் பிறையைப் பார்ப்பது குறித்து ஆய்வு செய்வதற்கான முக்கியக் குழு, ரமலான் 29 ஆம் தேதியான மே 1, 2022 ஞாயிற்றுக்கிழமை மாலை அறநிலையத்துறை மற்றும் மத விவகார அமைச்சின் பொது அலுவலகத்தில் பிறையைப் பார்ப்பது குறித்து ஆராயும் என கூறியுள்ளது.

மேலும் நாளை பிறை பார்க்கப்பட்டால் மே 2 ம் தேதி ஈத் அல் பித்ரின் முதல் நாளாகவும் இல்லையெனில் மே 3 ம் தேதி ஈத் அல் ஃபித்ரின் முதல் நாளாக இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் சவூதி அரேபியா, அமீரகம், கத்தார் உள்ளிட்ட மற்ற அனைத்து வளைகுடா நாடுகளும் மே 2 ம் தேதி ஈத் அல் ஃபித்ரின் முதல் நாள் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!