ADVERTISEMENT

பிரத்யேக சலுகைகளை வழங்கக்கூடிய ஹாப்பினஸ் கார்டை ஷாருக்கானுக்கு வழங்கி கவுரவித்த துபாய்..!!

Published: 14 Apr 2022, 6:17 PM |
Updated: 14 Apr 2022, 7:16 PM |
Posted By: admin

பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானுக்கு, துபாயில் உள்ள குடியுரிமை மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம் (GDRFA) புதன்கிழமை ஹாப்பினஸ் கார்டினை வழங்கி கவுரவித்துள்ளது.

ADVERTISEMENT

ஹாப்பினஸ் கார்டு வைத்திருக்கும் நபர்கள் துபாயில் தங்கியிருக்கும் போது தள்ளுபடிகள் மற்றும் ப்ரொமோஷன்கள் உட்பட பலவிதமான பிரத்தியேக சலுகைகளுக்கான அணுகலை இந்த அட்டை வழங்குகிறது.

சுற்றுலா பயணிகளுக்கு மறக்க முடியாத அனுபவத்தை வழங்குவதற்காக அதிகாரிகளால் இந்த ஹாப்பினஸ் கார்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

ADVERTISEMENT

ஷாருக்கானின் பிடித்த நகரங்களில் ஒன்றாக இருக்கும் துபாயில் அவர் தனக்கென கோடிக்கணக்கில் தனியாக ஒரு பெரிய வீட்டினை வைத்துள்ளார். துபாயின் பாம் ஜூமேராவில் இந்த வீடு உள்ளது மற்றும் இதன் மதிப்பு பல கோடி ரூபாயாகும்.

மேலும் சுற்றுலாவாசிகளுக்கென துபாயின் முக்கிய இடங்களை காட்டும் புதிய துபாய் ப்ரோமோவிலும் அவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT