ADVERTISEMENT

சவூதி அரேபியாவில் பிறை தென்படாததால் மே 2 ஈத் அல் ஃபித்ர் என அறிவிப்பு..!!

Published: 30 Apr 2022, 7:41 PM |
Updated: 30 Apr 2022, 7:47 PM |
Posted By: admin

சவூதி அரேபியாவில் ஏப்ரல் 30 சனிக்கிழமையன்று ஷவ்வால் பிறையை பார்க்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்ட நிலையில் இன்று பிறை காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஈத் அல் பித்ர் மே 2 (திங்கள்) அன்று இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

இதன் மூலம் நாளை, மே 1 ம் தேதி ரமலான் மாதத்தின் கடைசி நாளாகும் என கூறப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் உட்பட வளைகுடா நாடுகள் சவூதி அரேபியாவையே பின்பற்றும் என்பதால் அமீரக அரசும் இது குறித்த அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

இதற்கு முன்னர் இஸ்லாமிய நாட்காட்டியின்படி ஈத் அல் ஃபித்ரை குறிக்கும் ஷவ்வால் மாத பிறை மே 1 இரவு தென்படும் என்றும் மே 2 ஈத் அல் ஃபித்ரின் முதல் நாளாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.