ADVERTISEMENT

அமீரகத்தில் 15°C வரை வெப்பநிலை குறையும்..!! வானிலை மையம் தகவல்..!!

Published: 19 Apr 2022, 9:13 AM |
Updated: 19 Apr 2022, 9:14 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று வெப்பநிலையானது குறைந்து காணப்படும் என்று தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் அமீரகத்தின் சில பகுதிகளில் வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸ் வரை குறையும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும் அமீரகத்தில் இன்று இரவு மற்றும் புதன்கிழமை காலை ஈரப்பதத்துடன் இருக்கும் மற்றும் சில கடலோரப் பகுதிகளில் மூடுபனி உருவாக வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாகவே வெப்பநிலை அமீரகத்தில் அதிகரித்து காணப்பட்ட நிலையில் வெப்பநிலை குறையும் என தற்பொழுது வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT