ADVERTISEMENT

அமீரகத்தில் இன்று வெப்பநிலை 45°C உயரும்..!! வானிலை மையம் தகவல்..!!

Published: 13 Apr 2022, 7:31 AM |
Updated: 13 Apr 2022, 7:42 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்றைய வானிலையானது வெப்பமாகவும் ஓரளவு மேகமூட்டமாகவும் இருக்கும் என்று தேசிய வானிலை மையம் (NCM) தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இன்றைய வானிலை முன்னறிவிப்பில் சில பகுதிகளில், வெப்பமாகவும் ஓரளவு மேகமூட்டமாகவும் குறிப்பாக கடலோரப் பகுதிகள் மற்றும் தீவுகளில், வெப்பநிலை அதிகரிப்புடன் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் சில பகுதிகளில் வெப்பநிலையானது 45 டிகிரி செல்சியஸை அடையும் வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் லேசானது முதல் மிதமான வேகத்தில் வீசும் காற்றின் காரணமாக, சில நேரங்களில் பகல் நேரத்தில் தூசி வீசும் வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT