ADVERTISEMENT

துபாய்: அய்ன் துபாயின் தற்காலிக மூடல் மேலும் சில நாட்கள் நீட்டிப்பு..!!

Published: 17 Apr 2022, 9:21 AM |
Updated: 17 Apr 2022, 9:24 AM |
Posted By: admin

உலகின் மிகப்பெரிய ஃபெர்ரி வீலான அய்ன் துபாய் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில், இந்த மூடலானது மேலும் சிறிது காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து அய்ன் துபாய் தனது இணையதளத்தில் வெளியிட்ட அறிக்கையில், மேம்படுத்தும் பணிகளுக்காக தற்காலிகமாக மூடப்படுகிறது என்று கூறியுள்ளது.

இதற்கு முன்னர் அய்ன் துபாய் ரமலான் மாதம் முழுவதும் மூடப்படும் என கடந்த மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த நேரத்தில், ஈத் அல் பித்ர் விடுமுறை நாட்களில் மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

ஆனால் சமீபத்திய புதுப்பிப்பின் படி, இந்த தற்காலிக மூடலானது மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் மீண்டும் திறக்கும் தேதி குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.