ADVERTISEMENT

அமீரகத்தில் தொடர்ந்து உயர்ந்து வந்த பெட்ரோல் விலையில் சரிவு..!! மே மாதத்திற்கான விலைப்பட்டியல் வெளியீடு..!!

Published: 29 Apr 2022, 6:50 PM |
Updated: 29 Apr 2022, 6:55 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தின் எரிபொருள் விலை நிர்ணயிக்கும் குழுவானது மே 2022 ஆம் மாதத்திற்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அறிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே ஏற்றம் கண்டு வரும் பெட்ரோல் விலையானது இந்த முறை சற்று குறைந்துள்ளது.

ADVERTISEMENT

எரிபொருள் குழுவின் மே மாத விலைப்பட்டியலின் படி, மே 1 ஆம் தேதி முதல், Super 98 வகை பெட்ரோல் விலையானது ஒரு லிட்டருக்கு 3.66 திர்ஹம்சாக நிர்ணயிக்கப்பட்டுளளது. ஆனால் இந்த வகை பெட்ரோலின் விலை ஏப்ரல் மாதத்தில் 3.74 திர்ஹம்சாக இருந்தது.

அடுத்ததாக ஸ்பெஷல் 95 வகையை சார்ந்த பெட்ரோல் விலையானது ஒரு லிட்டருக்கு 3.55 திர்ஹம்சாக நிர்ணயிக்கப்பட்டுளளது. இந்த வகை பெட்ரோலின் விலை ஏப்ரல் மாதம் 3.62 திர்ஹம்சாக இருந்தது.

ADVERTISEMENT

மூன்றாவது வகை பெட்ரோலான இ-பிளஸ் 91 பெட்ரோல் விலையானது தற்போது ஒரு லிட்டருக்கு 3.48 திர்ஹம்சாக நிர்ணயிக்கப்பட்டுளளது. இது 3.55 திர்ஹம்சாக ஏப்ரல் மாதத்தில் இருந்தது.

அதே சமயம் ஏப்ரல் மாதத்தில் ஒரு லிட்டருக்கு 4.02 திர்ஹம்சாக இருந்து வந்த டீசல் விலையானது மே மாத விலை பட்டியலில் 4.08 திர்ஹம்சாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT