ADVERTISEMENT

ஈத் அல் ஃபித்ர்: பொதுத்துறை ஊழியர்களுக்கான விடுமுறையை அதிகாரப்பூர்வமாக அறிவித்த அமீரக அரசு..!!

Published: 21 Apr 2022, 3:26 PM |
Updated: 21 Apr 2022, 3:30 PM |
Posted By: admin

அமீரகத்தில் ரமலான் மாதத்தின் பாதி நாட்கள் கடந்துள்ள நிலையில் அமீரகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு ஈத் அல் ஃபித்ர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அமீரகத்தின் அரசாங்கள மனித வளங்களுக்கான ஃபெடரல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி அரசு ஊழியர்களுக்கு ரமலான் 29 முதல் ஷவ்வால் 3 வரை விடுமுறை என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு சில ஆண்டுகளாகவே அரசு துறை மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு ஒரே மாதிரியான விடுமுறை அளிக்கப்பட்டு வருவதால் தனியார் துறை ஊழியர்களுக்கும் இதே போன்று விடுமுறை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்தின் பிறை பார்க்கும் குழு கூடி ஈத் அல் ஃபித்ர் தொடங்குவதற்கான அதிகாரப்பூர்வ தேதியை உறுதிப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனடிப்படையில் ரமலான் 29 நாட்களுடன் முடிந்தால் 4 நாட்கள் விடுமுறையும் 30 நாட்களுடன் முடிந்தால் 5 நாட்கள் விடுமுறையும் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.