ADVERTISEMENT

கோல்டன் ரெசிடென்சி விசாவிற்கு சலுகைகளை அறிவித்த அமீரக அரசு.. திறமையானவர்களை ஈர்க்கவும், தக்கவைக்கவும் நடவடிக்கை..!!

Published: 19 Apr 2022, 6:03 AM |
Updated: 19 Apr 2022, 7:23 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைமுறையில் இருக்கும் நுழைவு விசா விதிகளை மேம்படுத்தி புதிய நுழைவு மற்றும் வதிவிடத் திட்டத்தை அமீரக அரசு அறிவித்திருந்தது. அதன் ஒரு பகுதியாக கோல்டன் ரெசிடென்சி விசாவிற்கான விதிமுறைகளையும் புதுப்பித்து புதிய அறிவிப்பை அமீரக அரசு வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரக அரசானது பல்வேறு நாட்டில் இருக்கும் திறமையானவர்களை அமீரகத்திற்கு ஈர்ப்பதற்கும், நாட்டில் உள்ள திறமையானவர்களை தக்கவைத்துக்கொள்வதற்கும் கோல்டன் ரெசிடென்சி விசாவை அறிவித்திருந்தது. தற்போது கோல்டன் ரெசிடென்சி விசா பெரும் வெளிநாட்டவர்களுக்கு மேலும் பல நன்மைகள் வழங்கப்படும் வண்ணம் புதிய விதிகளை புதுப்பித்துள்ளது. அதனை கீழே காணலாம்.

>> 10 ஆண்டுகளுக்கான இந்த குடியிருப்பு விசாவை மீண்டும் புதுப்பித்துக்கொள்ள முடியும்.

ADVERTISEMENT

>> அமீரகத்திற்கு வெளியே தங்கியிருக்கும் காலம் இந்த விசாவின் வேலிடிட்டியை ரத்து செய்யாது.

>> ஆதரவு அல்லது சேவை புரியும் தொழிலாளர்கள் அதிகபட்சம் இத்தனை பேர் தான் என்ற வரம்பு இல்லை.

ADVERTISEMENT

>> குடியிருப்பு விசாவை பெறுவது தொடர்பாக அமீரகத்திற்கு வருவதற்கு மல்டி என்ட்ரி வசதியுடன் 6 மாதங்களுக்கு செல்லுபடியாகும் நுழைவு விசா வழங்கப்படும்.

>> இந்த விசாவை பெறுவதற்கு ஸ்பான்சர் அல்லது முதலாளி தேவையில்லை.

>> இந்த குடியிருப்பு விசா பெரும் நபரின் மனைவி மற்றும் குழந்தைகள் உட்பட குடும்ப உறுப்பினர்களுக்கும் குடியிருப்பு விசா பெறுவதற்கு வயது வரம்பு இல்லை.

>> இந்த விசாவை வைத்திருப்பவர் இறந்தால், அவரது குடும்ப உறுப்பினர்கள் தங்கள் குடியிருப்பு அனுமதி முடியும் வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடர்ந்து தங்கலாம்.