ADVERTISEMENT

UAE ஈத் அல் ஃபித்ர்: ஷவ்வால் மாத பிறையை பார்க்குமாறு குடியிருப்பாளர்களுக்கு அழைப்பு விடுத்த அதிகாரிகள்..!!

Published: 29 Apr 2022, 3:35 PM |
Updated: 29 Apr 2022, 3:37 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அனைத்து முஸ்லிம்களையும் ஷவ்வால் மாதத்தின் பிறையை 29 ரமலான், சனிக்கிழமை மாலை, அன்று பார்க்குமாறு அமீரகத்தின் பிறை பார்க்கும் குழு அழைப்பு விடுத்துள்ளது.

ADVERTISEMENT

மேலும் பிறையைப் பார்க்கும் எவரும் 026921166 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு சாட்சியத்தைப் பதிவுசெய்ய அருகிலுள்ள நீதிமன்றத்திற்கு அனுப்புமாறும் குழு கேட்டுக் கொண்டுள்ளது.

இஸ்லாமிய நாட்காட்டியின் படி இந்த வருட ஈத் அல் ஃபித்ர் மே 2 ம் தேதி வரும் என்று வானியலாளர்கள் கணித்துள்ளனர். இருந்த போதிலும் நாளை பிறை பார்ப்பதை பொறுத்தே இது உறுதி செய்யப்படும்.

ADVERTISEMENT

கடந்த இரு ஆண்டுகளாக கடுமையான கொரோனா விதிமுறைகளுக்கு மத்தியில் ஈத் அல் ஃபித்ர் கொண்டாடப்பட்ட நிலையில் இந்த வருடம் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

இருப்பினும் ஈத் அல் ஃபித்ரின் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் அமீரகத்தின் தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT