அமீரக செய்திகள்

UAE: இனி லக்கேஜினை விமான நிறுவனம் கொண்டு செல்ல தேவையில்லை..!! கடைசி நேர டென்சனைக் குறைக்க விமான நிறுவனத்தின் புதிய சேவை..!!

அமீரகத்தை சேர்ந்த குறைந்த கட்டணத்தில் விமான சேவைகளை வழங்கி வரும் ஏர் அரேபியா விமான நிறுவனம் அபுதாபியில் அதன் சிட்டி செக்-இன் சேவைகளை அறிமுகப்படுத்துவதாக தற்பொழுது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. சிட்டி செக்-இன் சேவையானது, ஏர் அரேபியாவில் பயணம் செய்வதற்கு முன், பயணிகளுக்கு அவர்களின் லக்கேஜ்களை இறக்கிவிட்டு, போர்டிங் பாஸை அருகில் உள்ள இடத்தில் பெற்றுச் செல்வதன் மூலம், கூடுதல் வசதி மற்றும் நெகிழ்வுத்தன்மையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அதாவது விமான நிலையம் செல்லாமலேயே அபுதாபி சிட்டியில் இருக்கும் செக்-இன் சேவை மையத்திற்கு செல்லும் பயணி ஒருவர் தனது போர்டிங் பாஸை பெற்றுக்கொண்டு லக்கேஜ்களை அங்கேயே விட்டுச் சென்று விடலாம். இந்தச் சேவையானது பயணிகளுக்கு இருக்கைகளைத் தேர்ந்தெடுக்கவும், அவர்களது போர்டிங் பாஸ் மற்றும் பேக்கேஜ் க்ளைம் டேக்குகளைப் பெறவும் அனுமதிக்கிறது. அபுதாபி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தவுடன் அவர்கள் உடனடியாக விமானத்தில் செல்லலாம்.

அபுதாபியில் இருக்கும் ஏர் அரேபியா விற்பனைக் கடையில் அமைந்துள்ள இந்த மையம் விமானம் புறப்படுவதற்கு முன் 24 மணி நேரத்தில் இருந்து எட்டு மணிநேரம் வரை சாமான்களை ஏற்றுக் கொள்ளும். பின்னர் அவை நேரடியாக அபுதாபி சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்த சேவையை பெறுவதன் மூலம் புறப்படும் நேரத்தில் ஏற்படும் பதற்றத்தை நாம் தவிர்க்கலாம். அத்தோடு எல்லா லக்கேஜ்களையும் எடுத்துவிட்டோமா அல்லது அனைத்து லக்கேஜினையும் மறந்து விடாமல் விமான நிலையம் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற எந்த நினைப்பும் இன்றி கூலாக விமான நிலையம் செல்ல வழிவகுக்கின்றது. மேலும் போர்டிங் ஏற்கெனவே போட்டு விமான இருக்கையும் முடிவு செய்யப்பட்டு விடும் என்பதால் விமான நிலையத்தில் பயணிகள் விமானம் ஏறுவதற்கு முன் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளானது குறைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!