அமீரக செய்திகள்

அமீரகத்தில் இன்று தூசி நிறைந்த வானிலை நிலவும்..!! கடல் சீற்றத்துடன் இருக்கும் என வானிலை மையம் தகவல்..!!

ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்கள் வார இறுதியான இன்று மங்கலான மற்றும் தூசி நிறைந்த வானிலையை எதிர்கொள்வார்கள் என்று தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அமீரக தேசிய வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுப்படி (NCM) இன்று கடல் சீற்றத்துடன் இருக்கும் என்று எச்சரிக்கையை விடுத்துள்ளது. காற்று மணிக்கு 60கிமீ வேகத்தில் வீசும் என்றும் இதனால் அரேபிய வளைகுடா மற்றும் ஓமன் கடல் இரண்டிலும் அலைகளின் உயரம் 7 அடியை எட்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணி வரை இந்த கடல் சீற்றம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களை ஒப்பிடுகையில் 44°C வரை உயர்ந்த வெப்பநிலை, இன்று சற்று குறைந்து காணப்படும் என கூறப்பட்டுள்ளது

துபாய் மற்றும் அபுதாபியில் அதிகபட்சமாக 33 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் என்றும் நாளின் பிற்பகுதியில், வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் வரை குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் அல் அய்னில் 19 டிகிரி செல்சியஸ் என மிகக் குறைந்த வெப்பநிலையும், ஃபுஜைராவில் அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலையும் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!